தேசியக்கொடியுடன் படகு பேரணி; வங்கக்கடலில் மக்கள் உற்சாக வரவேற்பு
நமது நாட்டின் 80 வது சுதந்திர தினவிழா நாளை (15-08-26) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான பாதுகாப்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் முதல்வர் விஜய் நாளை தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பக்கத்து மாநிலமான புதுச்சேரியின், காரைக்கால் பகுதியில் காவல்துறையினர் படகுப் பேரணி நடத்தினர். இந்தியாவின் முக்கிய கடல் எல்லையான வங்கக்கடலில், 50க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நமது தேசியக்கொடியை ஏந்தி அசலாறு முகத்துவாரத்திலிருந்து சுமார் 20 கடல் மைல் தூரம் வரை பேரணியாகச் சென்றனர். மாநில டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணியின் போது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் கடற்கரையில் நின்று தேசியக்கொடியை அசைத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15, 2026) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காவல்துறையினர் சார்பில் படகுப் பேரணி நடைபெற்றது. வங்கக்கடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் 200-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் கலந்துகொண்டு உற்சாகமாகப் பங்கேற்றனர்.