கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.
கியூபா புரட்சியாளரும், முன்னாள் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் ((Fidel Castro)) நூற்றாண்டு விழா நேற்றுகொண்டாடப்பட்டது. கியூபா முழுவதும் 2026ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு ஆண்டாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மாநாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தலைநகர் ஹவானாவில், கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோவின் மனைவி டாலியா சோட்டோ டெல் வாலே மற்றும் கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கானல் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அதிபர் மிகுவல் டயஸ்-கானல், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று கூறினார்.

கியூபாவின் முன்னாள் தலைவரும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கியூபா முழுவதும் 2026-ஆம் ஆண்டை அவரது நூற்றாண்டு ஆண்டாக அறிவித்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகத் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற விழாவில், கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கானல், முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மனைவி டாலியா சோட்டோ டெல் வாலே ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பங்கேற்றனர்.