PulseNews
லைஃப் ஸ்டைல்

காதலிக்கு திட்டம் போட்ட வாலிபர்; மாட்டி விட்ட ஏ.ஐ

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் டேரன் சோ (25). இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருப்பினும், சில மாதங்களிலேயே தவிர்க்கமுடியாத காரணங்களால், இவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது 6 மாத கால காதலில் ஏற்பட்ட காதல் தோல்விக்குப் பிறகுத் தனது காதலி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் செயற்கை நுண்ணறிவான ‘சாட்பாட்’ தளத்தில் தனது மனக்குறைகள், வருத்தங்கள் மற்றும் காதலியை மீண்டும் அடைவது குறித்து உரையாடி வந்துள்ளார். காலப்போக்கில் இவரது திட்டம் கொடூர திட்டமாக மாறியது. அதன்படி, அவர் அந்த சாட்பாட்டில் இந்த மாத இறுதிக்குள் எனது காதலியைக் கொன்று விடுவேன். எனக்குக் கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. அவளை இன்று பாலியல் துன்புறுத்தல் செய்யப்போவதாகக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் என்று உரையாடியுள்ளார். மேலும், துப்பாக்கிகள், கயிறுகள், கையுறைகளின் படங்களைக் காதலிக்கு அனுப்பி மிரட்டியதாகவும், அவளை பாலியல் பலாத்காரம் செய்து சிறைபிடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான உரையாடல்களைக் கண்டறிந்த ஓபன் ஏஐ நிறுவனம், இது குறித்து பெடரல் புலனாய்வு (எஃப்.பி.ஐ) அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் அந்த வாலிபரைக் கைது செய்த காவல்துறை, அவருடைய 2 மாத கால சாட்பாட் உரையாடல்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், கடும் தண்டனைக்குப் பதிலாக, குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 8 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் முதல் 2 ஆண்டுகள் காலில் மின்னணு கண்காணிப்பு கருவி அணிய வேண்டும். மனநலப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், மது அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது மற்றும் முன்னாள் காதலியைத் தொடர்பு கொள்ளக் கூடாது எனப் பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு நிறுவனம் குற்றங்களைத் தடுக்க மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காதலிக்கு திட்டம் போட்ட வாலிபர்; மாட்டி விட்ட ஏ.ஐ
PulseNews சுருக்கம்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த டேரன் சோ (25) என்பவர், ஆறு மாதங்கள் காதலித்த தனது காதலியுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் தனது காதலியை மீண்டும் அடைவது குறித்த திட்டங்களை கடந்த மார்ச் மாதம் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட 'சாட்பாட்' தளத்திடம் அவர் பகிர்ந்து வந்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle