“இன்னொரு உயிரை சுமக்கும்போதும்...” - தாய்மையிலும் ஃபிட்னெஸை கைவிடாத நடிகை சமந்தா!
“ஒவ்வொரு கர்ப்பமும் வித்தியாசமானது. எனவே, என் உடற்பயிற்சிகளை யாரும் அப்படியே பின்பற்ற வேண்டாம். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி தொடங்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செயல்படுங்கள்” - நடிகை சமந்தா

தாய்மை அடைந்திருக்கும் நிலையிலும் தனது உடற்பயிற்சிகளை நடிகை சமந்தா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், தனது உடற்பயிற்சிகளை மற்றவர்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்று சமந்தா அறிவுறுத்தியுள்ளார். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் பெண்கள் முதலில் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.