சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இவ்விழாவிற்காக செங்கோட்டை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, செங்கோட்டையின் உள்ளேயும், வெளியேயும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் அனைத்தும் கண்காணிப்பு அறையிலிருந்து 24 மணிநேரமும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையையொட்டி, செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான டெல்லியை சுற்றிலும் பல அடுக்கு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க, முக்கிய இடங்களில் சிறப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் உயரதிகாரிகளும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து முப்படை மற்றும் டெல்லி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை பிரதமருக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 13வது முறையாக கொடியேற்றிய முதல் பிரதமர் என்ற சிறப்பை பெறுகிறார் நரேந்திர மோடி.

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
இந்த விழாவையொட்டி செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.