“தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்” - முதல்வர் விஜய் புகழாரம்!
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255வது நினைவு தினம் இன்று (20.08.2026) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அரசு விழா நடைபெற்றது. அப்போது அங்குள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் வில்சன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மாவீரன் ஒண்டிவீரனுக்கு தங்களது வீரவணக்கத்தைச் செலுத்தினர். இந்நிலையில் இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம். மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம். வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினம் இன்று (20.08.2026) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் விழா நடைபெற்றது.
அங்குள்ள ஒண்டிவீரனின் உருவச் சிலைக்கு அமைச்சர்கள் வில்சன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.