டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செங்கோட்டையின் கொத்தளத்திற்குப் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்கின்றனர். அதோடு பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் , டெல்லி பிராந்தியத்தின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைப் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, முதன்முறையாக ‘வந்தேமாதரம்’ பாடல் பாடப்பட்டது. முன்னதாக பிரதமர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கேப்டன் சோனியா சிங் சவுகான் உதவினார். அப்போது, 1721 ஃபீல்டு பேட்டரி பீரங்கிப் படையினரால் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மி.மீ. கொண்ட லைட் ஃபீல்டு பீரங்கிகளைப் பயன்படுத்தும் இந்த பீரங்கிப் படைக்கு மேஜர் பவன் சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார். மேலும் இதன் துப்பாக்கி நிலை அதிகாரியாக (Gun Position Officer) நைப் சுபேதார் அனுதோஷ் சர்க்கார் செயல்பட்டார்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15, 2026) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.