PulseNews
லைஃப் ஸ்டைல்

தேசிய கொடி இறக்கும் நிகழ்வு: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திடீரென ஒலித்த த.வெ.க பாடல்

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 80 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். டெல்லி செங்கோடையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உட்பட அந்தந்த மாநில முதல்வர்களும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். அமெரிக்காவின் 5 பெரிய ஏரிகளை விட பெருசு... பாலைவனத்துக்கு அடியில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட கடலா? தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இரு நாட்டு படையினரும் இந்த எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப்படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது மற்றும் மாலை இறக்குவது வழக்கம். இந்நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும். குறிப்பாக இந்திய சுதிரந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் அடாரி - வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசிய கொடி இறக்கும் நிகழ்வை கண்டு களிப்பர். இந்த நிலையில், இன்று அடாரி - வாகா எல்லையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு த.வெ.க கட்சியின் பாடல் 11 நொடிகள் ஒலித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேசிய கொடி இறக்கும் நிகழ்வு: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திடீரென ஒலித்த த.வெ.க பாடல்
PulseNews சுருக்கம்

இந்தியா தனது 78-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடியது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து அந்தந்த மாநில முதலமைச்சர்களும் தங்களது மாநிலங்களில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்வின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் திடீரென ஒலிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்த எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle