PulseNews
லைஃப் ஸ்டைல்

இந்த ஒரு யோகால இவ்வளவு விஷயம் இருக்கா? நடிகை வித்யா மாலவாடே பகிர்ந்த டாப் ஸ்லீப்பிங் சீக்ரெட்

இரவு நேர தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், சிலர் இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். 53 வயதான பாலிவுட் நடிகை வித்யா மாலவாடே தனது இரவு நேர ரோட்டின் குறித்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம். மாசம் கோடிகளில் சம்பளம்... ஆனாலும் ‘நோ’ யூஸ்; அமெரிக்க மக்கள் இன்னைக்கும் ஏழை தான் தேனீ மூச்சுப் பயிற்சி: காது குருத்தெலும்பை மூடி, மூச்சை உள்ளிழுத்து மூச்சை வெளியிடுவது. விளக்கெண்ணெய் நான் இதை ஒவ்வொரு நாளும் ஸ்கின், முடி மற்றும் பலவற்றுக்கு பயன்படுத்துகிறேன். உங்கள் தொப்புளில் 7 சொட்டுகள் வெதுவெதுப்பான விளக்கெண்ணெய் விடுவது வயிற்று உப்புசம் மற்றும் லேசான மலச்சிக்கலைக் குறைக்க உதவும். தோலை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும், மேலும் மாதவிடாய் வலிகளை தணிக்கும். இது உடல் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். தொடர்பை துண்டிக்கும் தியானம் (Cord cutting meditation) இந்த நாட்களில், நாம் அனைவரின் உணர்ச்சிகளையும் சுமர்ந்து திரிகிறோம். நாம் பார்க்கும் விஷயங்கள், சோஷியல் மீடியா, நல்லதோ, கெட்டதோ எல்லாவற்றையும் தூங்குவதற்கு முன்பு மறந்துவிடுவேன். இந்த பழக்கங்கள் எப்படி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன? என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் டாட் காம் (Indianexpress.com) நிபுணர்களைத் தொடர்பு கொண்டு கண்டறிந்தது. பிராமரி பிராணாயாமம் யோகா நிபுணரும் மாற்றுக் சிகிச்சை முறையாளருமான அனாதி சர்மா கூறுகையில், மாலவாடே செய்யும் பிராமரி என்பது அதாவது தேனீ மூச்சுப் பயிற்சி என்பது ஒரு சக்திவாய்ந்த யோகா மூச்சுப் பயிற்சி என்றும், மனதை அமைதிப்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று என்றும் கூறினர். "உங்கள் கட்டைவிரல்களால் உங்கள் காதுகளை மூடி, கண்களை மூடி, முதுகை நேராக வைத்து, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியிடும் போது, தேனீயைப் போல மென்மையான முனகல் ஒலியை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, கவலையைக் குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்திற்கு உதவுகிறது. "வழக்கமான பயிற்சியின் மூலம், இது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது, மன குழப்பங்களைத் தெளிவுபடுத்துகிறது மற்றும் உணர்ச்சி சமநிலையைக் கொண்டு வருகிறது. பிராமரி மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது" என்று அவர் மேலும் விவரித்தார். தொப்புளில் எண்ணெய் விடுதல் தானேவில் உள்ள கே.ஐ.எம்.எஸ் (KIMS) மருத்துவமனையின் ஆலோசனை தோல் மருத்துவர் டாக்டர் ஸ்வேதா நகவா கூறுகையில், தொப்புளில் எண்ணெய் தடவுவது பல வீடுகளில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய பழக்கமாகும். ஆனால் இது ஆரோக்கியம் அல்லது தோலுக்கு நன்மைகளை வழங்குகிறது என்பதற்கு மிகவும் வரம்பிற்குட்பட்ட அறிவியல் சான்றுகளே உள்ளன என்றார். "தொப்புளைச் சுற்றியுள்ள தோல் உடலின் பிற பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அல்லது மருத்துவ சேர்மங்களை வழங்கும் ஒரு சிறப்பு வழியாக செயல்படுவதில்லை. யாராவது இந்த வழக்கத்தை விரும்பினால், அது எரிச்சலை ஏற்படுத்தவில்லை என்றால் பயன்படுத்தலாம்” என்றார். View this post on Instagram A post shared by Vidya S Malavade (@vidyamalavade) இருப்பினும், அசுத்தமான தொப்புளில் எண்ணெயைப் பயன்படுத்துவது அழுக்கு, வியர்வை மற்றும் ஈரப்பதத்தைப் பிடித்து வைத்து, பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார். தியானம் ஹைதராபாத்தில் உள்ள லிக்டி கா புல், க்ளீனெகல்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஹரிச்சரன், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவை தளர்வு மற்றும் மன தெளிவை ஊக்குவித்து, மன அழுத்தம் மற்றும் கவலையைக் குறைக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது தூக்கத்தை ஊக்குவிக்கிறது. "தியானத்தின் போது உடல் தளர்வு நிலையை அனுபவிக்கும் போது, நாம் தூங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மெலடோனின் உற்பத்தி உச்சத்தை அடைவதால், இது விரைவாக தூங்கவும் ஆழமான, மிகவும் அமைதியான தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்த ஒரு யோகால இவ்வளவு விஷயம் இருக்கா? நடிகை வித்யா மாலவாடே பகிர்ந்த டாப் ஸ்லீப்பிங் சீக்ரெட்
PulseNews சுருக்கம்

இரவு நேரத் தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானது என்றாலும், பலரும் சரியான தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை வித்யா மாலவாடே தனது இரவு நேர வழக்கங்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூக்கமின்மையைப் போக்க உதவும் ஒரு பயிற்சியாக தேனீ மூச்சுப் பயிற்சியை அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் காது குருத்தெலும்புகளை மூடியபடி, மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றுவது போன்ற நுணுக்கங்களை அவர் விளக்கியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle