PulseNews
லைஃப் ஸ்டைல்

தமிழ் வழியில் படித்த மாணவி; மணிப்பூர் அரசு கொடுத்த அங்கீகாரம்

மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனித்தா பொறுப்பேற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மிக இளவயது மாவட்ட ஆட்சியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏஞ்சலின், தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவி ஆவார். பின்பு, சென்னையில் பொறியியல் படிப்பை முடித்த ஏஞ்சலின், மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார். அதன் விளைவாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மணிப்பூர் மாநில கேடருக்கு தேர்வானார். மணிப்பூரில் உள்நாட்டு இணை செயலாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் ஏஞ்சலின் திறம்பட பணியாற்றினார். அவரது நிர்வாகத்திறமையைப் பாராட்டி மாநில அரசு அவரை புதிய மாவட்ட ஆட்சியராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் வழியில் படித்த இவர், 28 வயதில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழ் வழியில் படித்த மாணவி; மணிப்பூர் அரசு கொடுத்த அங்கீகாரம்
PulseNews சுருக்கம்

மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனித்தா பொறுப்பேற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மிக இளவயது மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், தனது பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியில் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பொறியியல் படிப்பை முடித்த ஏஞ்சலின், மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தீவிரமாகப் பயிற்சி பெற்றார். இவரது விடாமுயற்சியின் பயனாக, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle