திருக்கேதீச்சரத்தில் சிங்கள பௌத்த விகாரை...! அம்பலமான திட்டம்
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவேடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும் இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த அபிவிருத்தி...

மன்னார் திருக்கேதீச்சரம் ஆலய வளாகத்திற்குள் அனுமதியின்றி பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். வருங்காலத்தில் அங்கு சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோக்குடனேயே இச்செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் எவருக்கும் தெரியாத வகையில், நள்ளிரவு நேரத்தில் உரிய அனுமதியின்றி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமையைக் குலைக்கும் வகையில் இத்திட்டம் அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.