PulseNews
லைஃப் ஸ்டைல்

காமராஜர் விருதுக்கு 2 பள்ளிகள் தேர்வு

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மாணவர் சேர்க்கை அதிகரித்தல் இடை நின்றலை குறைத்தல் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக சிறப்பான செயல்பாடு விளையாட்டுப்போட்டி தேர்ச்சி சதவீதம் போன்ற பல்வேறு காரணிகளாக வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு தேர்வாகும் மேல்நிலை பள்ளிக்கு ஒரு லட்சமும் உயர்நிலை பள்ளியாக இருந்தால் 75,000 நடுநிலை பள்ளிக்கு 50,000 தொடக்கப் பள்ளிக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இதை பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவ மாணவிகளின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை கைகோள பாளையம் உயர்நிலைப்பள்ளி நடைபாண்டில் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளது .

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காமராஜர் விருதுக்கு 2 பள்ளிகள் தேர்வு
PulseNews சுருக்கம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கான காமராஜர் விருது வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, இடைநிற்றல் குறைப்பு, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகள், விளையாட்டு மற்றும் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்கு பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன.

மேல்நிலை பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாயும், உயர்நிலை பள்ளிக்கு 75,000 ரூபாயும், நடுநிலை பள்ளிக்கு 50,000 ரூபாயும், தொடக்கப்பள்ளிக்கு 25,000 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இரண்டு பள்ளிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle