PulseNews
லைஃப் ஸ்டைல்

Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?

ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி மாதம் 26ம் தேதியான இன்றைய நாளின் ராசிபலன்கள் பற்றி காணலாம். இன்று ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை ஆகும். இன்றைய நாளில் மாத சிவராத்திரி வருவது கூடுதல் சிறப்பாகும்.

இன்றைய நாளின் விவரம்

நாள்: 11.08.2026 - செவ்வாய்கிழமை

திதி: தேய்பிறை சதுர்த்தசி

நட்சத்திரம்: காலை 10.30 வரை புனர்பூசம், அதன்பிறகு பூசம்

நல்ல நேரம்:

காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

ஆகஸ்ட் 11 ராசிபலன்கள்

மேஷம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள். பணி நிமித்தமான நுட்பங்களை அறிவீர்கள். அரசு காரியத்தில் பொறுமையுடன் செயல்படவும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

மிதுனம்

சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கை கூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமான வகையில் இருந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

கடகம்

உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உருவாகும். எதிலும் நேர்மறையுடன் செயல்படவும்.

சிம்மம்

பலம் மற்றும் பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

கன்னி

தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும்.

துலாம்

வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். அரசு பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

உத்தியோகம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். கடந்த கால நினைவுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலங்களால் மனதளவில் சோர்வுகள் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கடன் விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வழக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கும்பம்

சூழ்நிலை அறிந்து செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவுகள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு பணியில் இருந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும்.

மீனம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீக தொடர்பான புரிதல்கள் மேம்படும். நுண் கலை சார்ந்த தேடல்கள் உண்டாகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 11, 2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்களைப் பற்றி இன்று காணலாம். ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையான இன்றைய நாளில், மாத சிவராத்திரியும் இணைந்து வருவது சிறப்பம்சமாகும்.

இன்றைய தினமானது தேய்பிறை சதுர்த்தசி திதியைக் கொண்டுள்ளது. காலை 10.30 மணி வரை புனர்பூச நட்சத்திரமும், அதன்பிறகு பூச நட்சத்திரமும் நிலவுகிறது. இன்றைய நாளில் கடக ராசிக்கு லாபமும், கும்ப ராசிக்கு வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle