செம்மணியில் இதுவரை 530 என்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது. இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுப்பு அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 544 என்பு கூடுகள் அ...

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 50-வது நாள் பணிகள் இன்று (12) இடம்பெற்றன. இதன்போது 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், 6 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இடம்பெற்ற முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 530 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 544 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.