PulseNews
லைஃப் ஸ்டைல்

சிறுமியின் வயிற்றில் 50 கிராம் தங்கம்; அவ்வளவு பெரிய பணக்கார குடும்பமா?

சீனா நாட்டின் வடக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமி, கையில் 4 செ.மீ. நீளமும் 50 கிராம் எடையும் கொண்ட தங்கக் கட்டியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாகச் சிறுமி அந்த தங்கக் கட்டியை விழுங்கிவிட்டார். இதையறிந்த பெற்றோர் பதறிப்போய்விட்டனர். உடனடியாக அவர்கள் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் வேறு மருத்துவமனைக்குச் சென்றனர். இவ்வாறாக, சில மணி நேரங்களில் பல மருத்துவமனைகளுக்கு அவர்கள் சென்றனர். இருப்பினும், அங்கெல்லாம் மருத்துவம் பார்க்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால், இறுதியாக அந்த சிறுமி பீஜிங்கில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி மூலமாகச் சிறுமியின் வயிற்றில் தங்கக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் எந்தவித உள் காயங்களும் இன்றி, அறுவை சிகிச்சையின் மூலமாகச் சிறுமியின் வயிற்றில் இருந்த தங்கக் கட்டியை அகற்றினர். இதையடுத்து, சிறுமி உயிருக்கு எந்த வித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் பலவிதமான கருத்து தெரிவித்து வருகின்றர். அந்த வகையில், ”சிறுமியின் கையில் 50 கிராம் தங்கக் கட்டியைக் கொடுக்கும் அளவுக்கு, அவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பமா அது?” என்று கிண்டலாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிறுமியின் வயிற்றில் 50 கிராம் தங்கம்; அவ்வளவு பெரிய பணக்கார குடும்பமா?
PulseNews சுருக்கம்

சீனாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி ஒருவர், 4 செ.மீ நீளம் மற்றும் 50 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியை விளையாட்டாக விழுங்கிவிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், சிறுமியை அடுத்தடுத்து பல மருத்துவமனைகளுக்கு அவர்கள் அலைந்து கொண்டு சென்றனர். ஆனாலும், உரிய சிகிச்சையைப் பெறுவதில் அவர்களுக்குத் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle