நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன்!
தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் 50 - ஆம் வருட விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மத்திய அரசின் வழக்கறிஞர் ராகேஷ் மற்றும் 101 வயது உடைய மூத்த அரசியல்வாதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு பெரும் உதவி செய்த மருத்துவர் பத்ம ஸ்ரீ ஹண்டே ஆகியோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை வழங்கினர். தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் நிறுவனத் தலைவர் புரட்சிவேந்தன் சுந்தரமூர்த்தி 50 வருடங்களாக சிறப்பாக சமூக சேவை செய்து வருவதை பாராட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் அவரை மனதார பாராட்டி வாழ்த்தினர்.

சென்னையில் தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் அமைப்பின் 50-ஆம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அரசு வழக்கறிஞர் ராகேஷ், 101 வயதுடைய மூத்த அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் ஹண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தனர். குறிப்பாக, இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் சேவையாற்றிய மருத்துவர் ஹண்டே இந்த விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.