PulseNews
லைஃப் ஸ்டைல்

"சூப்பர் சிக்ஸ் சரி... 6 சிலிண்டர் எங்கே?" - விஜய்யின் அறிவிப்பைக் கிழித்தெறிந்த டிடிவி தினகரன்!

அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"சூப்பர் சிக்ஸ் சரி... 6 சிலிண்டர் எங்கே?" - விஜய்யின் அறிவிப்பைக் கிழித்தெறிந்த டிடிவி தினகரன்!
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியின்போது ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது முதற்கட்டமாக 3 சிலிண்டர்கள் மட்டுமே என அறிவித்துள்ளதை அவர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து டி.டி.வி. தினகரன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle