திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை, ஆக. 28: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிபட்டனர். நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில். அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக இறைவன் எழுந்தருளிய...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டனர். பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் இக்கோயிலில் பவுர்ணமி விழாவிற்காக திரளான மக்கள் கூடினர்.
அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.