18ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், பிரண்டவயல் கிராமத்தில் ஒரு புராதனக் கல்வெட்டு இருப்பதாக அக்கிராமத்தைச் சேர்ந்த முத்து மற்றும் ஆறாவயல் பெரியய்யா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா கள ஆய்வு மேற்கொண்டு அக் கல்வெட்டில் உள்ள செய்தி குறித்து அவர் கூறியதாவது, மூன்று அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இக்கல்வெட்டில் மொத்தம் ஐந்து வரிகள் காணப்படுகின்றன. 1. திருனாகீசர் 2. க்கு முத்து குமா 3. ரு தேவர் பிற 4. தோச கட்டளைக்கு 5. நம்பு குளி எனக் காணப்படும் இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதமுடிகிறது. முத்துகுமார் தேவர் என்பவர் திருநாகேஸ்வரர் கோயிலுக்கு பிரதோசக் கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப்பகுதியைக் கொடையாகக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டில் சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களைக் குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்தை தானமாகக் கொடுத்த முத்துகுமார் தேவர் இப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் பிரண்ட வயல் கிராமத்தில், நம்புகுளி என்ற பெயரில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான குறிப்பிட்ட நிலப்பகுதி கோயில் நிலமாக இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு கிடைத்த பிரண்டவயல் கிராமத்திற்கு அருகில் உள்ள கோட்டவயல் என்னும் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானக் கோயிலான நாகநாதர் கோயில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு குறிப்பிடும் திருநாகீசர் இங்குள்ள நாகநாதராக இருக்கலாம். இக்கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனவும் பொறிக்கப்பட்டுள்ளது .பிரதோஷக் கட்டளை என்பது தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் பிற சோழர் காலச் சிவாலயக் கல்வெட்டுகளில் "பிரதோஷ காலத்து திரு அமுது செய்ய" (உணவு படைக்க) காசுகளும், பொன்னும் முதலீடாக வைக்கப்பட்ட விவரங்கள் விரிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களும் உள்ளூர் நிலப்பிரபுக்களும் குறிப்பிட்ட விளைநிலங்களை அல்லது முழு கிராமங்களையே கோயிலுக்குத் தானமாக வழங்கினர். அந்த நிலத்தில் இருந்து வரும் நெல் மற்றும் வருவாய், பிரதோஷத்தன்று இறைவனுக்குப் படைக்கப்படும் அமுதுபடி (நைவேத்தியம்) மற்றும் சாத்துப்படி (ஆடை, ஆபரணம்) செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →