தமிழ்நாடு மத்தியப் பல்கலை.யின் 11வது பட்டமளிப்பு விழா..!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தில் முதன்மை மாணவர்களாகத் திகழ்ந்தவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கிய துணைக் குடியரசுத் தலைவர், 703 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். பல்வேறு துறைகளில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த 45 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
விழாவின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்ற 45 ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 703 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.