PulseNews
லைஃப் ஸ்டைல்

“மாநாட்டு உரையை முன்கூட்டியே முடித்தது ஏன்?” - திருமாவளவன் எம்.பி. பரபரப்பு விளக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில், ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நேற்று முன்தினம் (17.08.2026) நடைபெற்றது. அப்போது தொல். திருமாவளவன் தீபம் ஏந்தி ரேம்ப் வாக் செய்தார். அதனை தொடர்ந்து திருமாவளவன் உரை நிகழ்த்தினார். முன்னதாக மாநாட்டு மேடையில் அக்கட்சித் தொண்டர்கள் குவிந்ததால், மேடையில் இருந்த திருமாவளவன் டென்ஷனாகி தொண்டர்களை காட்டமாக பேசி அங்கிருந்து கீழே அனுப்பி வைத்தார். மேலும், மாநாட்டில் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் திருமாவளவன் தனது உரையை பாதிலேயே முடித்துக் கொண்டார். இந்நிலையில் இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில், “உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் உயிருக்கு அச்சம் ஏற்படும் அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அந்தச் சூழலிலும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். பெண்கள், முதியோருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மாநாட்டில் சுருக்கமாகப் பேசினேன். அவர்கள் அத்தனை பேரும், அந்த நெரிசலிலும், மரண பயம் மேலோங்கி இருந்த சூழலிலும் என்னோடு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காட்டிய ஆர்வம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பாகத் திரும்பிச் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரையும் அந்த நெரிசலிலும் கேட்டுக்கொண்டேன். வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள் என மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்த நெரிசலில் சிக்கிக்கொள்ளக்கூடாது. மாற்றுத்திறனாளிகள் இந்த நெரிசலில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்ற கவலை எனக்கு மேலோங்கி இருந்தது. இதனால் மூன்று நிமிடங்களுக்குள்ளாக எனது உரையை நான் நிறைவு செய்துவிட்டேன். கரூரில் நடந்தது போல் இங்கு நடந்துவிடக்கூடாது. மக்களைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் நிலை உருவாகிவிடக்கூடாது என்கிற பதற்றமும் எனக்குள் இருந்தது. எனவே, ஓரிரு நிமிடங்களில் நான் உரையை நிறைவு செய்து, அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். இன்னும் சில நிமிடங்கள் நான் பேசிக்கொண்டே இருந்திருந்தால், இந்த நெரிசல் எந்த அளவுக்குப் போயிருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கடல் அலை வீசுவது போல் தோழர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்து, தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில்தான் இருந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் உணர முடியும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“மாநாட்டு உரையை முன்கூட்டியே முடித்தது ஏன்?” - திருமாவளவன் எம்.பி. பரபரப்பு விளக்கம்!
PulseNews சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ம் தேதி ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் தீபம் ஏந்தி மேடையில் வலம் வந்தார்.

இந்த மாநாட்டின் போது மேடையில் தொண்டர்கள் அதிகளவில் கூடியதால் அதிருப்தி அடைந்த திருமாவளவன், அவர்களைக் கண்டித்து மேடையை விட்டு கீழே இறங்கச் செய்தார். இந்தச் சூழலில், அவர் தனது உரையை முன்னதாகவே முடித்துக்கொண்டதற்கான காரணத்தை தற்போது விளக்கம் அளித்து விளக்கியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle