PulseNews
லைஃப் ஸ்டைல்

சுதந்திர தினத்தில் அதிரடி அங்கீகாரம்...! 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு...!

2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, புலன் விசாரணை பணிகளில் சிறப்பான திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய 10 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்டு, தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை மிகுந்த ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் பணியைப் பாராட்டும் வகையில் இந்த சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கம் பெறுவோர் சி. ஜெயஸ்ரீ – காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம். சே. லதா – காவல் ஆய்வாளர், தனிச்சிறுவர் காவல் உதவிப் பிரிவு, கோவை மாநகரம். வி. கோமதி – காவல்துறை உதவி தலைவர், நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை. மா. சித்ரா – காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம். ரா. வினதா – காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம். நா. தமிழரசி – காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளூர் உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம். கொ. அழகுராஜ் – காவல் ஆய்வாளர், இணையக் குற்றக் காவல் நிலையம், கோவை மாநகரம். ந. தனுசியா – காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம். கோ. மகாலெட்சுமி – காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப் பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம். ச. விஜயகுமார் – காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம். சிறந்த பொதுச் சேவைக்கான காவல் பதக்கம் பொதுமக்களின் நலனையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தி, தன்னலம் பாராமல் சிறப்பான சேவையாற்றிய 5 காவல் அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கும் 2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சரின் சிறந்த பொதுச் சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் வி. சசி மோகன் – காவல்துறை துணைத்தலைவர், திண்டுக்கல் சரகம். க. மதன் மோகன் – காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை. மு. ரவிக்குமார் – தலைமை காவலர், கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம். தெ. சண்முக பிரியா – காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம், சென்னை. சி.எம்.ஆர். மணிமொழியன் – துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை. தங்கப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு இந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையிலான தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.சிறப்பான புலன் விசாரணை, அர்ப்பணிப்பான பணிச்சேவை மற்றும் பொதுமக்கள் நலனில் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சுதந்திர தினத்தில் அதிரடி அங்கீகாரம்...! 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு...!
PulseNews சுருக்கம்

2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, குற்ற வழக்குகளை விசாரிப்பதில் சிறப்பாக செயல்பட்ட 10 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

புலன் விசாரணை பணிகளில் அர்ப்பணிப்புடன் கூடிய திறமையை வெளிப்படுத்தியதற்காக இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle