நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்... மத்திய அமைச்சரின் பதிலால் பெரம்பலூர் மக்கள் மகிழ்ச்சி

திருச்சி: நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம் குறித்து மக்களவையில் எம்.பி., அருண் நேரு கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் என்ன பதில் அளித்துள்ளார் என்று தெரியுங்களா?

தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், பெரம்பலூர் வழியிலான புதிய ரயில் பாதை திட்டம் குறித்தும் மக்களவையில் எம்.பி., அருண் நேரு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்துள்ளார்.

நாமக்கல்லில் தொடங்கி பெரம்பலூர் வழியாக அரியலூரை இணைக்கும் புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பான விரிவான செயல்திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான செயல்திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசுடன் ஆலோசிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் மதிப்பீட்டு ஒப்புதல்கள் பெறப்பட்டு, திட்டத்திற்கு முறையான இறுதி அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு:

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களை விடப் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். 2009 - 2014 காலகட்டத்தில் ஆண்டிற்கு சராசரியாக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2026 - 2027 நிதியாண்டு: நிதி ஒதுக்கீடு 8 மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு:

நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 1,874 கிலோமீட்டர் தொலைவிலான 19 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு ரூ.27,282 கோடி மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில்:

8 புதிய ரயில் வழித்தடத் திட்டங்கள்
3 அகல ரயில் பாதையாக மாற்றும் (Gauge Conversion) திட்டங்கள்
8 இரட்டை ரயில் பாதை (Doubling) திட்டங்கள் அடங்கும்.
மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையங்கள்:
ரயில்வே திட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 2 பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையங்கள் (Electronic Manufacturing Clusters) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மணலூர்: 474.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.587.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

பிள்ளைப்பாக்கம்: 379.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.424.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மையப்பகுதியான பெரம்பலுார் மாவட்டத்தில், ரயில் போக்குவரத்து வசதி இல்லை. இதனால், இந்த மாவட்ட மக்கள், 70 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில், 108 கி.மீ., துாரம் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், முதல் கட்டமாக சர்வே நடத்த உத்தரவிட்டது. இதற்காக, 16.20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, எந்த முன்னேற்றமும் இன்றி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல்-அரியலுார் புதிய ரயில் பாதை திட்டம் தொடர்பாக, நாமக்கல் - அரியலுார் இடையே புதிய ரயில்பாதை அமைக்க விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது பெரம்பலூர் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை, எந்தவித தாமதமும் இன்றி விரைந்து முடித்து, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலையும் விரைவாக பெற வேண்டும் என்பதே, பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கை. இதற்கு முன்னுதாரணமாக, 85 கி.மீ., நீளமுடைய சேலம்-நாமக்கல்-கரூர் ரயில் பாதை திட்டம் முழுமையாக நிறைவேற, 13 ஆண்டுகளானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நாமக்கல் - அரியலுார் திட்டத்தில், ஆரம்ப கட்ட நிர்வாக நடவடிக்கைகளையே துரிதப்படுத்தினால், பல ஆண்டுகள் சேமிக்கப்படுவதோடு, மக்களின் நீண்டநாள் கனவும் விரைவில் நனவாகும்.

மக்களவையில் நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம் குறித்து எம்.பி., அருண் நேரு கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் பெரம்பலூர் வழியாக புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பான அவரது கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரிவான விளக்கமளித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த பதிலால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.