முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!

பலர் நரை முடியை மறைக்கவும், கூந்தல் பராமரிப்பிற்காகவும் தங்கள் தலையில் மருதாணியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனைப் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது எதனால் என பார்க்கலாம்.

சமீபகாலமாக நரை முடியால் பாதிக்கப்பட்டவர்களும், முடிக்கு ஹேர் கலர் அடிக்க நினைப்பவர்களும் முதலில் மருதாணியை தான் பயன்படுத்துவார்கள். இது இயற்கையானது, பாதுகாப்பானது என்றெல்லாம் எண்ணம் நமக்குள் இருக்கும். இதை ஒரு இயற்கையான முடிச்சாயம் என்று கருதி சிறு வயது முதல் வயதானவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் அடிக்கடி தலைக்கு மருதாணி பூசுவது வறட்சி மற்றும் சொரசொரப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருதாணியில் உள்ள ஒரு இயற்கைச் சாயமான லாவ்சோன், முடியில் உள்ள கெரட்டினுடன் பிணைந்து, ஆரஞ்சு-சிவப்பு முதல் பழுப்பு வரையிலான வண்ணங்களை அதற்கு அளிக்க முடியும். இந்தப் பிரச்சனை இயற்கையான மருதாணியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. சந்தையில் கிடைக்கும் சில மருதாணி முடிச்சாயப் பொருட்களில் மற்ற இரசாயனங்களும் சாயங்களும் கலந்திருக்கலாம். எனவே மருதாணி என்ற பெயரில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் இயற்கையானது இல்லை என்பதை உணருங்கள்.

மருதாணி முடியை அடர்த்தியாகவும் வலிமையாகவும் உணரச் செய்யும். வறண்ட, சுருள் அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்கள் மருதாணி பயன்படுத்துவதை குறைத்து விடலாம். அதேபோல சாதாரண முடிச்சாயங்களில் உள்ள சில கடுமையான இரசாயனங்களைப் போல தூய மருதாணி முடியின் நிறத்தை வெளுக்காது. முடியின் மீது மருதாணி இட்ட பிறகு ஈரப்பதமூட்டும் கண்டிஷனர் அல்லது பொருத்தமான முடி பராமரிப்பு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

நரை முடியை மறைப்பதற்காக ஒவ்வொரு வாரமும் அல்லது அடிக்கடி மருதாணி பூச வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள். மருதாணி ஒருவரின் தலைமுடிக்குப் பலனளிப்பது மற்றொருவருக்கும் கட்டாயம் பலனளிக்கும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை. எனவே பயன்படுத்தும் முன் கவனம் தேவை.

அதேசமயம் பிளாக் ஹென்னா என அழைக்கப்படும் கருப்பு மருதாணி தயாரிப்புகளில் பாரா-ஃபீனைலெனெடியமைன் என்ற இரசாயனங்கள் இருக்கலாம். இது சிலருக்குக் கடுமையான தோல் ஒவ்வாமை, எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே பயன்படுத்தும் முன் அதில் உள்ள இடுபொருட்களை சோதனை செய்வது நல்லது. அரிப்பு, எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் அதை உங்கள் தலைமுடியில் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். கடுமையான பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருதாணி நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான சான்றுகள் எதுவும் இல்லை.மருதாணியை தலைமுடியில் பூசக்கூடாது என்பதை விட தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது நல்லது.

நரை முடியை மறைக்கவும் தலைமுடி பராமரிப்பிற்காகவும் பலர் இயற்கையானது என எண்ணி மருதாணியைப் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இதனைப் பயன்படுத்தி வரும் நிலையில், இதனைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கையான முடிச்சாயம் என்று கருதப்படும் மருதாணியை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பது குறித்த விளக்கங்களை நிபுணர்கள் தற்போது பகிர்ந்துள்ளனர். முடி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.