போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு..!
போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 'LET'S SAY NO TO DRUGS' என்ற விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை சிட்டி சென்டர் வரை நடைபெற்ற மனித சங்கிலியில் 3 ஆயிரத்து 7 மாணவர்கள் பங்கேற்றனர்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. ‘போதைப்பொருள் வேண்டாம்’ (LET'S SAY NO TO DRUGS) என்ற முழக்கத்தை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரியிலிருந்து சென்னை சிட்டி சென்டர் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 3 ஆயிரத்து 7 மாணவர்கள் கலந்துகொண்டனர். போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.