2026 Krishna Jayanthi: 2026 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? .. கிருஷ்ணர் பிறந்த நேரத்தை நோட் பண்ணிக்கோங்க!

இந்து மதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான கோகுலாஷ்டமி 2026ம் ஆண்டு எப்போது வருகிறது, அதன் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

அனைவராலும் கொண்டாடப்படும் கிருஷ்ணர்

இந்து மதத்தில் வழிபடுவதற்கு ஏராளமான கடவுள்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் என தனி சிறப்புகள் உள்ளது. சமய ரீதியாக கடவுள்கள் பிரிக்கப்பட்டாலும் பண்டிகை, விழாக்கள் என வரும்போது அந்த பிரிவுகள் பார்க்கப்படுவதில்லை. அதனால் அன்றைய நாட்களில் நாம் வீட்டில் வழிபாடு, கோயிலில் வழிபாடு என மனம் மகிழ வேண்டுகிறோம்.

அப்படியான இந்து மதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிக முக்கிய இடமுண்டு. அவர் பிறந்த தினம் தான் கோகுலாஷ்டமியாக, கிருஷ்ண ஜெயந்தியாக, ஜென்மாஷ்டமியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கடவுளாவார். விஷ்ணுவின் தசாவதாரங்களில் 8வது அவதாரமாக கிருஷ்ணர் உள்ளார்.

கிருஷ்ணர் பிறந்த வரலாறு

இவர் ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நாளில் மதுரா நகரத்தில் உள்ள சிறைச்சாலையில் தேவகி - வசுதேவர் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக நள்ளிரவில் பிறந்தார். மதுரா நகரை ஆண்ட ஒரு கொடூரமான அரசனான கம்சனுக்கு அழிவுக்காலம் அவனது சகோதரி தேவகியின் எட்டாவது மகனால் நிகழும் என அசரீரி கேட்டது. இதனால் பயந்துபோன கம்சன் அவர்களை சிறையில் அடைக்க அங்கேயே கிருஷ்ணர் பிறந்தார். அந்த கணம் சிறைக்கதவுகள் அனைத்தும் தானாக திறந்தன. கம்சனால் கிருஷ்ணருக்கு ஆபத்து நேரலாம் என்பதால் வசுதேவர் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு யமுனை ஆற்றைக் கடந்து கோகுலத்திற்கு சென்றார். அங்கு நந்தகோபர் - யசோதை தம்பதியின் மகனாக கிருஷ்ணர் வளர்ந்தார்.

கோகுலத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. வெண்ணெய் திருடி உண்டு சேட்டை செய்ததாக வரலாறு கூறும் அனைத்து கிருஷ்ண ஜெயந்தி நாளில் மக்களால் நினைவுக்கூறப்படும். கிருஷ்ண ஜெயந்தி வைணவ சமயத்தைப் பின்பற்றும், யாதவர் உள்ளிட்ட இன மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக பார்க்கப்பட்டாலும் இப்போது அனைத்து சமூக மக்களும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

2026 கிருஷ்ண ஜெயந்தி எப்போது?

அந்த வகையில் 2026ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி வரும் செப்டம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அஷ்டமி திதியானது செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 2.09 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 4 இரவு 11.46 மணிக்கு முடிவடைகிறது. நள்ளிரவு 11.57 மணி முதல் அதிகாலை 12.43 மணிக்குள் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்பட்டாலும் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் மட்டுமே கணக்கில் கொண்டால் போதும். இந்த நாளில் நாம் பகவான் கிருஷ்ணர் நம் இல்லத்துக்கு வருவதாக கருதி கைகள் அல்லது குழந்தைகளைக் கொண்டு கால் தடமும், சிறப்பு வழிபாடும் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து மதத்தில் முக்கிய பண்டிகையாக கருதப்படும் கோகுலாஷ்டமி 2026-ம் ஆண்டு எப்போது வருகிறது என்பது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
இந்து மதத்தில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தனித்தனி சிறப்புகள் இருந்தாலும், பண்டிகைகளின் போது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர். அத்தகைய சிறப்புமிக்க கிருஷ்ண ஜெயந்தியன்று, பக்தர்கள் வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு மகிழ்வார்கள்.