தாம்பரம் அருகே விசிக நிர்வாகி வெட்டி கொ@லை-போலீசார் விசாரணை
சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மர்மக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருநீர்மலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் அவரைத் திட்டமிட்டு வழிமறித்துள்ளது. அவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் அவரது தலை மற்றும் உடல் பகுதிகளில் சராமாரியாக வெட்டிவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை குறித்துத் தகவல் அறிந்ததும், குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அன்பழகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அன்பழகன் மீது ஏற்கனவே 3 கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே திருநீர்மலை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருந்த அன்பழகன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்பழகன் தனது இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை வெளிவட்டச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.