PulseNews
லைஃப் ஸ்டைல்

கல்லில் பொறித்த வெற்றிக்காவியம்... ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி: வெற்றியைச் சொன்ன கல்... வரலாற்றைச் சொன்ன மொழி!

தஞ்சாவூர்: பழந்தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் வெறும் ஆவணங்கள் அல்ல; அவை காலத்தை வென்று நிற்கும் வரலாற்றுச் சாட்சிகள். மன்னர்களின் பரம்பரை, புகழ், வீரத்தைப் போற்றும் நீண்ட புகழுரைகளுடன் தொடங்கிய இந்த மரபில், ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியவர் முதலாம் ராஜராஜ சோழன்.

வெற்றுப் புகழ்ச்சிகளைக் கடந்து, மன்னன் தனது ஆட்சியில் பெற்ற வெற்றிகளைப் பதிவு செய்யும் “மெய்க்கீர்த்தி” மரபு ராஜராஜ சோழன் காலத்தில் வலுப்பெற்றது. அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டான கி.பி. 993-ம் ஆண்டிலிருந்து கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்திகள் இடம்பெறத் தொடங்கின. ஒவ்வொரு புதிய வெற்றியும் அந்த மெய்க்கீர்த்தியில் சேர்ந்து கொண்டே சென்றதால், சோழப் பேரரசின் விரிவை ஆண்டுவாரியாக அறிந்து கொள்ளும் வரலாற்றுக் கதவாகவும் அவை அமைந்தன.

“ஸ்வஸ்திஶ்ரீ... திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி...”

என்ற வரிகளோடு தொடங்கும் ராஜராஜனின் மெய்க்கீர்த்தி, ஒரு மன்னனின் வெற்றிப் பயணத்தை கவிதை மொழியில் கல்லில் பதித்திருக்கிறது.

காந்தளூர்ச்சாலையில் தொடங்கிய வெற்றிப் பயணம்!

ராஜராஜனின் முதல் முக்கியமான வெற்றியாகக் கருதப்படும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தல், இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்வாகும்.

“கலம் அறுத்தல்” என்பது கப்பல்களை அழித்ததைக் குறிக்கிறதா? காந்தளூர்ச்சாலை சேரர்களின் கடற்படைத் தளமா? அல்லது போர்ப்பயிற்சி அளிக்கப்பட்ட சாலையா? வரலாற்றாசிரியர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலர் இதை சேரர்களின் கடற்படை வலிமையை முறியடித்த நிகழ்வாகக் கருதுகின்றனர். மற்றொரு கருத்துப்படி, அது சேரர்களின் போர்ப்பயிற்சி அமைப்பைத் தாக்கி அவர்களின் இராணுவ வலிமையைச் சிதைத்த வெற்றியாக இருக்கலாம்.

எது எப்படியாயினும், சோழப் பேரரசின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு காந்தளூர்ச்சாலை ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ஒரு மன்னனின் வாளில் விரிந்த பேரரசு!

காந்தளூர்ச்சாலைக்குப் பிறகு ராஜராஜனின் வெற்றிப் பயணம் ஓயவில்லை. கிருஷ்ணா–கோதாவரி நதிகளுக்கு இடையே அமைந்த வேங்கி நாடு, கர்நாடகப் பகுதிகளில் இருந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய குடகு நாடு என சோழப் படைகளின் வெற்றிக்கொடி விரிந்தது.

அதன் பின்னர் சேர நாட்டின் கொல்லம், இன்றைய ஒடிசாவின் தென்பகுதியை ஒட்டிய கலிங்கம் ஆகிய பகுதிகளும் சோழர் ஆட்சியின் செல்வாக்குக்குள் வந்தன. பின்னர் கடல் கடந்தது சோழப் படை.

இலங்கை வெற்றி, ராஜராஜனின் பேரரசு விரிவாக்கத்தில் மிகப்பெரிய அத்தியாயமாக அமைந்தது. அதோடு இன்றைய மகாராஷ்டிரத்தின் தென்பகுதியைச் சேர்ந்த இரட்டபாடி ஏழரை இலக்கம் போன்ற பகுதிகளும் அவரது வெற்றிப் பட்டியலில் இணைந்தன.

கடலை வென்ற சோழக் கொடி!

ராஜராஜனின் வெற்றிகளில் தனிச்சிறப்புடையது மாலத்தீவுகள் மீதான படையெடுப்பு. கடலைக் கடந்து சோழக் கடற்படை பெற்ற இந்த வெற்றி, சோழர்களின் கடற்படை வலிமையை வெளிப்படுத்திய முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடல் வழி வணிகப் பாதைகளையும் சோழ வணிகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

பின்னாளில் அவரது மகன் ராஜேந்திர சோழன் கடாரம் வரை படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டியதற்கான கடல் வழிப் பாதையை உருவாக்கிய முன்னோடி வெற்றிகளில் இதுவும் ஒன்று.

தோற்ற மன்னர்களின் பெயர் இல்லை... வென்ற நாடுகளின் பெயர்கள் மட்டுமே!

ராஜராஜனின் மெய்க்கீர்த்தியின் மிகப்பெரிய தனிச்சிறப்பு இதுதான். அவர் வென்ற நாடுகள் வரிசையாகப் பதிவு செய்யப்பட்டாலும், அந்த நாடுகளை ஆண்ட தோல்வியடைந்த மன்னர்களின் பெயர்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படவில்லை.

மன்னர்களை அல்ல... வரலாற்றின் நிலப்பரப்பையே பதிவு செய்தது இந்த மெய்க்கீர்த்தி. அதனால் ராஜராஜனின் மெய்க்கீர்த்தி வெறும் அரசப் புகழுரை அல்ல; சோழப் பேரரசு எந்தத் திசையில், எந்தக் காலகட்டத்தில் விரிவடைந்தது என்பதைத் தேடிக் கண்டறிய உதவும் வரலாற்றுக் குறியீடாகவும் விளங்குகிறது.

கல்லில் செதுக்கப்பட்ட சில வரிகள்...

ஒரு பேரரசின் எழுச்சியைப் பேசுகின்றன. ஒரு மன்னனின் வாளை மட்டுமல்ல... தமிழரின் கடல் கடந்த ஆற்றலையும் பேசுகின்றன. அதனால்தான், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி — கல்லில் எழுதப்பட்ட ஒரு வெற்றிக் கவிதை; காலம் அழிக்க முடியாத ஒரு சோழ வரலாற்றுக் காவியம்!

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கல்லில் பொறித்த வெற்றிக்காவியம்... ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி: வெற்றியைச் சொன்ன கல்... வரலாற்றைச் சொன்ன மொழி!
PulseNews சுருக்கம்

தஞ்சாவூர் மன்னர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் வெறும் ஆவணங்கள் மட்டுமல்ல, அவை காலத்தைக் கடந்து நிற்கும் வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன. மன்னர்களின் பரம்பரை, வீரம் மற்றும் புகழைப் போற்றும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த மரபில் முதலாம் ராஜராஜ சோழன் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மன்னர் தனது ஆட்சிக்காலத்தில் பெற்ற உண்மையான வெற்றிகளைப் பதிவு செய்யும் 'மெய்க்கீர்த்தி' என்னும் புதிய மரபை இவர் வலுப்படுத்தினார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle