‘மாரத்தான் - 2026’ போட்டியை அமைச்சர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்..!
ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்! போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம் என்ற விழிப்புணர்வு முழக்கத்தை முன்னிறுத்தி, கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தான் 2026 போட்டியை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் மேற்கு புறவழிச்சாலை பகுதியில் துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ‘மாரத்தான் - 2026’ நிகழ்வின் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் விக்னேஷ் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ‘போதைப்பொருள் இல்லா கோவை’ என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் ‘மாரத்தான் - 2026’ போட்டி நடத்தப்பட்டது. மேற்கு புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அமைச்சர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்.