திருச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உடைகளுக்கான திருச்சி 2026 ஃபேஷன்ஷோ..
பாரம்பரிய உடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருச்சியில் நடைபெற்ற திருமணமான பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திருச்சி 2026ஃபேஷன் ஷோ' என்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் Ramp Walk வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெண்கள் அழகிய பட்டுச் சேலை உடுத்தி தலையில் மல்லிகைப் பூ சூடி மேடையில் நளினமாக நடந்து வந்த காட்சி, அனைவரையும் கவர்ந்த நிலையில் நிகழ்வின் முத்தாய்ப்பாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் கம்பீரத்துடன்மேடையில் நடந்து வந்தார்.

திருச்சியில் பாரம்பரிய உடைகளை மையமாக வைத்து 'திருச்சி 2026 ஃபேஷன் ஷோ' எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் குழந்தைகள், ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மேடையில் ராம்ப் வாக் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அழகிய பட்டுப் புடவை மற்றும் மல்லிகைப் பூ சூடிய பெண்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் மிகுந்த கம்பீரத்துடன் மேடையில் நடந்து வந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.