திருமணப் பரிசாக நான் வைத்த கோரிக்கை, இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த எம்.ஜி.ஆர்: சபாநாயகர் சொன்ன சுவாரஸ்ய தகவல்
தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகராக இருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையை நடுநிலையாக நடத்தி வருவதாக பலரும் பாராட்டி வரும் நிலையில், இவர் அவ்வப்பபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து நினைவுகளையும் சட்டசபை நிகழ்வகளில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தனக்கு திருமணம ஆனபோது, எம்.ஜி.ஆரிடம் தான் வைத்த கோரிக்கை குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு, குறிப்பாக வன்னிய கிறிஸ்தவர்களுக்கு சமூக மற்றும் கல்வி ரீதியான சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தக்காண வன்னிய கிறிஸ்தவர் சங்கத்தின் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான நான் தெரிவித்துள்ளேன். அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களில், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பதுடன், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வன்னியர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான மாநாட்டிற்கு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் 2 முறை என்ன அனுப்பி வைத்தார். தனது திருமணத்தையொட்டி முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது, வன்னிய கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி நானும் என் துணைவியாரும் அவரிடம் கடிதம் கொடுத்தோம். அப்போது, வன்னிய கிறிஸ்தவர்கள் சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நாடார் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த மதம் மாறியவர்களுக்கு வழங்கப்படும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தொடர்பான சலுகைகளைப் போலவே, வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். வன்னிய கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தனது “திருமணப் பரிசாக” வழங்க வேண்டும் எனக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டோம். அந்தக் கடிதத்தை முதலமைச்சர் பெற்றுக்கொண்டு, அதைப் பார்த்து சிரித்தபடியே தனது பையில் வைத்துக் கொண்டார். 2 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் யாரும் வெளியிடாத ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் எந்த சமூகப் பட்டியலில் இருந்தாலும், அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்திய அளவில் முன்னுதாரணமாகக் கருதப்படும் வகையில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் பழனியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக, உங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆணையிடுவேன் என்று சொன்னார். அதன்படி அந்த அரசாணை வெளியானது. ஆனால், அந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட நடைமுறையில் சில குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் சிறுபான்மையினர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில், அரசாணை பிறப்பித்ததே தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை, அதற்கான நடைமுறை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதே முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இதுபோன்ற அறிவிப்பு கொடுக்க முடியும் என்று சொன்னார். இதற்குப் பின்னர், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கிராமம் வாரியாகவும் மாவட்டம் வாரியாகவும் வன்னிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு கணக்கெடுப்புகள் நடத்தவில்லை. அதே சமயம் இந்த கணக்கெடுப்பு தான் உண்மையான நீதியை கொடுக்கும் என்றால், அதை யாராக இருந்தாலுமு் உடனடியாக செய்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் புதிய அரசு கரிசனையோடு எல்லா மக்களையும் ஆதரிக்கின்ற அரசாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு இருக்கும் முதல்வர் இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அவை நடவடிக்கைகளை நடுநிலையுடன் நடத்துவதாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவ்வப்போது, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உடனான தனது நினைவுகளை அவர் அவையில் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வரிசையில், தனது திருமணத்தின் போது எம்.ஜி.ஆரிடம் முன்வைத்த கோரிக்கை குறித்து அவர் சட்டப்பேரவையில் விவரித்தார். குறிப்பாக, இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வன்னிய கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமூக மற்றும் கல்வி ரீதியான உரிமைகள் குறித்து அவர் அந்த நிகழ்வில் கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.