சாதிக்க வயது தடையில்லை; 97 வயதில் மூதாட்டி கின்னஸ் சாதனை
பிரிட்டனின் செல்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் பெட்டி ப்ரோமேஜ் (97). இவர் பறக்கும் விமானத்தின் மேல் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள பிரத்தியேக ஆசனத்தின் மீது நின்று சாகசப்பயணம் மேற்கொள்ள ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சினாரெஸ்டர் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏரோ சூப்பர் பேடிக்ஸ் இருதள விமானத்தின், இறக்கையின் மீது நின்றபடி இவர் சாகசத்தில் ஈடுபட்டார். மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் பறந்த அந்த விமானத்தில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக ஆபத்தான முறையில் பயணம் செய்து மூதாட்டி சாதனை படைத்தார். இந்த சாதனையின் மூலமாக உலகின் மிக வயதான பெண் விமான இறக்கை சாகச வீராங்கனை என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மூதாட்டி தனது 93 வயதில் இந்த சாகசத்தைச் செய்திருந்தார். அது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை இவரே முறியடித்துள்ளார். இவர் தனது 87 வது வயதில் இருந்து இதுவரை 6 முறை இந்த விமான சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு நிதி உதவி செய்யவே இந்த சாகசத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.

பிரிட்டனின் செல்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்த 97 வயது மூதாட்டி பெட்டி ப்ரோமேஜ், விமானத்தின் இறக்கையில் நின்றபடி சாகசப் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சினாரெஸ்டர் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஏரோ சூப்பர் பேடிக்ஸ் இருதள விமானத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த பிரத்தியேக ஆசனத்தில் நின்றபடி அவர் இந்த சாகசத்தை நிகழ்த்தினார்.
மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் பறந்த அந்த விமானத்தில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவர் சாகசத்தில் ஈடுபட்டார். வயதைக் கடந்து அவர் செய்த இந்த வியக்கத்தக்க சாதனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.