தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; வெளியான சூப்பர் அப்டேட்!
அரசு மருத்துவமனை மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, விஜய் தமிழக முதல்வரானப் பிறகு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து, 22 கேரட் 916 ஹால்மார்க் தரச் சான்றுடன் மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 755.83 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் சுகாதார துறை சார்பாக கோரப்பட்டது. இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளது. 4 மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியிருந்ததைத் தொடர்ந்து ஏராளமான தங்க நிறுவனங்கள் விண்ணப்பத்திருந்தது. அதன்படி ஜிஆர்டி நிறுவனம் செய்கூலி, சேதாரமாக ரூ.410.97யும், உம்மிடி பங்காரு நிறுவனம் செய்கூலி, சேதாரமாக ரூ.822.97 கோரியிருந்தது. ஆனால் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தங்கம் விலையைவிட செய்கூலி, சேதாரமாக வெறும் ஒரு பைசா மட்டுமே கூடுதலாக கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தங்க மோதிரம் திட்டத்துக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70%, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30%யும் பணி ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. விஜய் தமிழக முதலமைச்சரான பிறகு, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 22 கேரட் 916 ஹால்மார்க் தரத்துடன் கூடிய இந்த தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.