PulseNews
லைஃப் ஸ்டைல்

கையில் செருப்புடன் ஓடிய தாய்; நெஞ்சத்தை உருக வைக்கும் காட்சி

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது தாய் ரமாபாய் ரன்வீர், தனது மகள்களின் கல்விச் செலவுக்காக வெறும் காலில் மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். ராமாபாய் தனது கணவரை இழந்துவிட்ட நிலையில், அங்குள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சமையல் வேலை பார்த்து வருகிறார். குடும்பம் வறுமையான சூழலில் உள்ள போதிலும், தனது 2 மகள் களையும் கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார். மூத்த மகள் பி.எஸ்சி படத்துக்கொண்டிருகும் அதே வேளையில், காவலர் பணிக்காகவும் தயாராகி வருகிறார். இரண்டாவது மகள் வங்கி தேர்விற்குத் தயாராகி வருகிறார். இந்நிலையில், மகள்களின் படிப்பு செலவிற்காகவும் , புத்தகங்கள் வாங்க போதிய பணம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளார். இந்நிலையில், அம்பாஜோகாய் பகுதியில் உள்ள அகாடமி சார்பில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மகள்களின் படிப்பு செலவிற்காக, இந்த போட்டியில் ராமாபாய் கலந்துகொண்டார். எந்த வித முன் பயிற்சியும் இல்லாத அவர், பாரம்பரிய புடவை அணிந்து கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டார். ஓடும் போது கழன்று விழுந்த செருப்பையும், கையில் எடுத்துக்கொண்டு வெறுங்காலுடன் ஓடினார். இளம் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த போட்டியில் வெறுங்காலுடன் கரடுமுரடான அந்த சாலையில், அவர் சற்றும் மனம் தளராமல் ஓடினார். அயராது ஓடிய அவர், உழைப்பிற்கேற்றவாறு முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, போட்டியில் முதலிடம் பிடித்த ராமபாய்க்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. இது குறித்துப் பேசிய அவர், இந்த பணத்தை எனது மகள்களின் படிப்பு செலவு மற்றும் புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்துவேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வறுமையிலும் தன் மகள்களின் கல்விக்காகக் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடி வெற்றி பெற்ற தாயின் மன உறுதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனிடையே, இந்த போட்டியில் இவரது இரண்டாவது மகள் பூஜா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது தாயாரை ஊக்குவிக்கவே இந்த போட்டியில் கலந்துகொண்டேன். எனது சகோதரி காவலர் பணிக்குப் பயிற்சி தயாராகி வருகிறார். நான் வங்கி பணிக்காகத் தயாராகி வருகிறேன் என்று தெரிவித்தார். பூஜாவின் இந்த அர்ப்பணிப்பைப் பார்த்த கல்வி மைய இயக்குநர், பூஜாவின் பயிற்சிக்கு ஆகும் செலவைத் தானே ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கையில் செருப்புடன் ஓடிய தாய்; நெஞ்சத்தை உருக வைக்கும் காட்சி
PulseNews சுருக்கம்

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், தனது மகள்களின் கல்விச் செலவுக்காக வெறும் கால்களுடன் மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். கணவரை இழந்த ரமாபாய், ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சமையல் வேலை பார்த்து வரும் சூழலிலும் தனது வறுமையைப் பொருட்படுத்தாமல் மகள்களைக் கல்லூரிக்கு அனுப்பி வருகிறார்.

இவரது மூத்த மகள் பி.எஸ்சி பட்டப்படிப்புடன் காவலர் பணிக்காகவும் பயிற்சி பெற்று வருகிறார். கையில் செருப்பை ஏந்தி ஓடிய இத்தாயின் நெஞ்சை உருக்கும் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle