மல்லிகைப் பூ கட்ட தெரியலையா? ஒரே ஒரு ட்ரிக்... அழகான பன் மல்லி ரெடி
மல்லிப் பூ என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கோயில் திருவிழாக்கள், வீட்டு விஷேசங்கள் என எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் மல்லிப் பூ எப்போதும் முதல் இடம் பிடிக்கும். பெண்கள் பொதுவாக தலையில் வைக்க ஆசைப்படும் பூக்களில் மல்லிப் பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மண மாலை முதல் குழந்தையின் தலையில் இருக்கும் பூ வரை எல்லா இடத்திலும் மல்லிகைப் பூ தான் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் மிகப்பெரிய பெருங் கடலுக்கு ஆபத்து... ஆசியா, அமெரிக்கா ஒன்று சேர்ந்து உருவாகும் புதிய ‘சூப்பர் கண்டம்’ அதிலும், அடர்த்தியாக கட்டி வைக்கும் மல்லிப் பூ அதிகம் கவனம் ஈர்க்கிறது. மதுரை போன்ற மல்லிப் பூவிற்கு ஃபேமஷான இடங்களில் நல்ல குண்டு மல்லியை அடர்த்தியாக கட்டி விற்பார்கள். இது வாங்கி வைக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். சிலர் வீட்டிலேயே மல்லிப் பூவை அடர்த்தியாக கோர்த்து வைப்பார்கள். ஆனால், அடர்த்தியாகவும் அழகாகவும் மல்லிகைப்பூ கோர்ப்பது பலருக்கும் சவாலாகவே இருக்கிறது. குறிப்பாக தொடக்க நிலையில் உள்ளவர்கள் நூலை இறுக்கமாகப் பிடித்து, ஒரே மாதிரி முடிச்சு போடுவது சிரமமாக உணர்கிறார்கள். இதற்குத் தீர்வாக, சமூக ஊடகங்களில் பல ஹேக் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது, அடர்த்தியாக பூக்கட்ட சிம்பிள் வழி ஒன்று இருக்கிறது. ஒரு ஊசி, நூலை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு பூ கட்ட தேவையான அளவு நூலை எடுத்துக் கொள்ளுங்கள். View this post on Instagram A post shared by indian natural flowers (@indian_natural_flowers) பின்னர் மல்லிகைப் பூவை ஊசியில் கையால் மல்லிகைப் பூவை எப்படி அடத்தியாக கட்டுவோமோ அந்த முறையில் கோர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரு முனைகளையும் முடிச்சு போட்டால் இந்த காலத்திற்கு ஏற்ற மாதியான பன் (Bun) மல்லிகைப் பூ ரெடியாகிவிடும். இதனை நீங்கள் தலையிலோ அல்லது விசேஷ நாட்களில் வீட்டை அலங்கரிப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுப நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடுகளில் மல்லிகைப் பூ முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு, பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான மலராகவும் இதைக் கருதுகின்றனர். மதுரை போன்ற பகுதிகளில் கிடைப்பது போல, மல்லிகைப் பூவை அடர்த்தியாகவும் அழகாகவும் கட்டுவது பலருக்கு கடினமான ஒன்றாக உள்ளது.
இதற்குத் தீர்வாக, சமூக ஊடகங்களில் வைரலாகும் எளிமையான நுணுக்கம் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். ஒரு ஊசியில் நூலைக்கோர்த்து, பூக்களை முறையாக அடுக்கி முடிச்சு போடுவதன் மூலம், அழகான 'பன் மல்லி' (Bun Malli) தயார் செய்து விசேஷங்களுக்குப் பயன்படுத்தலாம்.