PulseNews
லைஃப் ஸ்டைல்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு பணி ஆணை வழங்கியது தமிழக அரசு

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கு’ நகை விநியோகம் செய்வதற்கான பணி ஆணையை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய்யால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பராமரிப்புப் பொருள்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான தாய்மாமன் சீர் மரபைப் போற்றும் வகையில் இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி (பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்) அன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜய்யின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியதன் கீழ், அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் தாயையும் கௌரவிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், குழந்தை பிறப்பை நினைவுகூரும் வகையிலும் தாய்மையைக் கொண்டாடும் வகையிலும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வழங்குவதற்காக 14.07.2026 அன்று தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் TN Tenders Portal வாயிலாக ஒப்பந்தப்புள்ளிகள் (Tender) கோரப்பட்டன. இதில் 11 முன்னணி நகை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், தங்க மோதிரம் செய்வதற்கான 1 கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் பி.ஐ.எஸ் ஹால்மார்க் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்துக் கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து 1 மோதிரத்திற்கு ரூ. 0.01 (1 பைசா) மட்டுமே கட்டணமாகக் கோரி ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் மிகக் குறைந்த விலைப்புள்ளியை (Lowest Bidder) அளித்துள்ளது. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளின்படி, இந்த மிகக் குறைந்த விலையை ஏற்றுக்கொள்வது தொடர்பாகப் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் கேட்கப்பட்டதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) நிறுவனம் மட்டுமே அதற்கு ஒப்புதல் தெரிவித்தது. செப்.15-ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ளதால், ஜூன் மாதம் முதல் அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மிகக் குறைந்த விலைப்புள்ளி அளித்த ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 70% பங்கும், அதே விலையை ஏற்க ஒப்புக்கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30% பங்கும், என்ற 70:30% அடிப்படையில் 2 நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணி ஆணையை (Work Order) வழங்கியுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு பணி ஆணை வழங்கியது தமிழக அரசு
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நகை விநியோகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு பணி ஆணைகளை வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவையான பராமரிப்புப் பொருட்களுடன் சேர்த்து ஒரு கிராம் தங்க மோதிரமும் வழங்கப்படவுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle