சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் காமராஜர் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 6:00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சுற்றுவட்டாரத்தில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காமராஜர் சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ் இல்லாத வாகனங்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பாஸ் இல்லாத வாகனங்கள் லேபர் சிலை வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையில், 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வர் கொடி ஏற்றி சிறப்பிக்க உள்ளார். இதற்காக முக்கிய சாலைகளில், அன்றைய தினம் காலை, 6:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை, போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அமல்படுத்த உள்ளனர். சென்னையில் உழைப்பாளர் சிலை – போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை; போர் நினைவுச் சின்னம் – ரிசர்வ் வங்கி சுரங்கபாதை வரையிலான ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலைகளில், சிவப்பு மற்றும் ஊதா நிற வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் ஊதா நிற அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள், காலை 8:10 மணி வரை ராஜாஜி சாலை வழியாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலக உள் வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, கோட்டை ஜப்பான் ஹவுஸ், ராணுவ கவாத்து மைதானம், அமைச்சர்கள் பார்க்கிங் பகுதி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் பின்புறம் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை, 8:10 மணிக்கு மேல் வருபவர்களுக்கு போர் நினைவுச் சின்னம் வழியாக அனுமதியில்லை என்றும் மாறாக ரிசர்வ் வங்கி சுரங்கபாதை வழியாக வந்து, தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு, பொதுப்பணிதுறை வாகன நிறுத்ததில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலம் மற்றும் பிங்க் நிற வாகன அனுமதி அட்டை உள்ளவர்களுக்கு, காலை 8:10 மணி வரை, காமராஜர் சாலை வழியாக போர்நினைவுச் சின்னம் வரை வர அனுமதியில்லை. அவ்வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கபாதை வழியாக, தலைமைச் செயலக வெளிவாயிலில் அருகே இறங்கிக் கொண்டு, பொதுப்பணிதுறை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 6:00 மணி முதல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் காமராஜர் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, காமராஜர் சாலையின் குறிப்பிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதி அட்டை (பாஸ்) இல்லாத வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.