அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல்
அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் இடம்பெற்றது. நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி ஆரம்பமானது. கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, புனித...

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியில் இருந்து அமைதிப் பேரணி ஒன்று ஆரம்பமானது. இதில் கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.