PulseNews
லைஃப் ஸ்டைல்

சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம் பெண்கள் மகளிர் நலவாரியத்தின் உறுப்பினராகபதிவு செய்வதற்கு ஏதுவாக வருகின்ற 17.08.2026 மற்றும் 18.08.2026 முகாம்கள் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர்: நல வாரியத்தில் இணைய சிவகங்கை முகாம்!

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் மாவட்ட வாரியாக உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் விவரங்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக வாரியத்திற்கென தனியாக www.tnwidowwelfareboard.tn.<wbr />gov.in என்ற வலைபயன்பாடு (Web Application) 18.06.2024 அன்று துவக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மேற்கண்ட வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நிலையான தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில், பங்களிப்பு தொகை பெற்று வழங்கிட 17.08.2026 அன்று சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் 18.08.2026 அன்று சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் என இரண்டு நாட்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு வாரிய உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
PulseNews சுருக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்தத் தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்கள் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. தகுதியுடைய பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல வாரியத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle