PulseNews
லைஃப் ஸ்டைல்

அவித்த முட்டை ஏன் சாம்பல் நிறமாக மாறுகிறது? சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் தரும் விளக்கம்

அவித்த முட்டையின் ஓட்டை உரிக்கும்போது, அதன் மஞ்சள் கருவைச் சுற்றி சாம்பல் அல்லது பச்சை நிறத்தில் வளையம் (Grey-green ring) இருப்பதை நாம் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்தவுடன், முட்டை கெட்டுப் போய்விட்டதா அல்லது அதைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. இது குறித்து தானேவிலுள்ள KIMS மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் அம்ரீன் ஷேக் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். நிற மாற்றத்திற்கான அறிவியல் காரணம் மஞ்சள் கருவைச் சுற்றி இந்த நிற மாற்றம் ஏற்படுவதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. பெரும்பாலான நேரங்களில், முட்டையை அதிக நேரம் வேகவைப்பதாலேயே (Overcooking) இது நிகழ்கிறது. முட்டையை அதிக வெப்பத்திலோ அல்லது அதிக நேரமோ வேகவைக்கும்போது, முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள கந்தகமும் (Sulphur), மஞ்சள் கருவில் உள்ள இரும்புச்சத்தும் (Iron) வேதியியல் ரீதியாக ஒன்றிணைந்து 'இரும்பு சல்பைடு' (Iron sulphide) உருவாகிறது. இதுவே மஞ்சள் கருவைச் சுற்றி சாம்பல் கலந்த பச்சை வளையமாக மாறுகிறது என்று அம்ரீன் ஷேக் விளக்குகிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க சாப்பிட பாதுகாப்பானதா? இந்நிற மாற்றம் முட்டை கெட்டுப்போய்விட்டது என்பதைக் குறிக்காது. வேகவைப்பதற்கு முன்பாக முட்டை புதியதாகவும் (Fresh), சரியான முறையில் வேகவைக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டதாகவும் இருந்தால், அந்தச் சாம்பல் வளையத்தால் எந்தத் தீங்கும் இல்லை; அதைத் தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், அதிக நேரம் வெந்ததால் மஞ்சள் கரு வறண்டு, கெட்டியாகி, சாப்பிடுவதற்கான சுவை சற்றுக் குறையக்கூடும் என்கிறார் அவர். இதைத் தவிர்ப்பது எப்படி? முட்டையைத் தேவையான அளவு மட்டுமே வேகவைத்து, வெந்ததும் உடனே குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் தண்ணீரில் போட வேண்டும். இது முட்டை மேலும் வேகுவதைத் தடுப்பதோடு, ஓட்டை எளிதாக உரிக்கவும் உதவும். மஞ்சள் கருவின் நிறத்தை விட முட்டையை நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதே மிக முக்கியம். அவித்த முட்டையை அதிக நேரம் சாதாரண அறை வெப்பநிலையில் வைத்திருக்கக் கூடாது. முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசினாலோ, அதன் மேல் பிசுபிசுப்புத் தன்மை இருந்தாலோ அல்லது கெட்டுப்போனதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அதை நிச்சயமாகச் சாப்பிடக் கூடாது. முட்டையில் உயர்தர புரதம், வைட்டமின் B12 மற்றும் கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, வெறும் நிற மாற்றத்தை மட்டுமே காரணமாக வைத்து முட்டையைத் தவிர்க்க வேண்டியதில்லை. இருப்பினும், துர்நாற்றம் அல்லது சுவையில் மாற்றம் இருந்தால் அதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரை பொதுத் தளத்தில் உள்ள தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உங்கள் உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அவித்த முட்டை ஏன் சாம்பல் நிறமாக மாறுகிறது? சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் தரும் விளக்கம்
PulseNews சுருக்கம்

அவித்த முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி தோன்றும் சாம்பல் அல்லது பச்சை நிற வளையத்தைக் கண்டு பலர் அது கெட்டுப்போய்விட்டதாகக் கருதி அச்சமடைகிறார்கள். இந்த நிற மாற்றம் குறித்து தானேவிலுள்ள KIMS மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் அம்ரீன் ஷேக் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிற மாற்றம் ஏற்படுவதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது முட்டை கெட்டுப்போனதற்கான அறிகுறி அல்ல என்பதால், இதனை உண்பது பாதுகாப்பானதுதான் என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle