காருக்குள் இருந்த 3 பைகள்; கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கண்ணையா லால், ’எஸ்கேஜி குந்தன் கிராஃப்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும், நகை வியாபாரியுமான இவர், நகைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழில் ரீதியான விளம்பர பணிகள் தொடர்பாக அவர் தனது மகன் துருவ் சோனி மற்றும் தனது பணியாளர் ஒருவருடன் கடந்த 18 ஆம் தேதி டெல்லிக்கு வந்துள்ளார். மறுநாள் 19 ஆம் தேதி, அவர்கள் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள சில நகை வியாபாரிகளைச் சந்தித்தனர். பின்பு, அன்று மாலை 5.30 மணியளவில் தான் 3 பைகளில் கொண்டுவந்த தங்க மற்றும் வைர நகைகளை காரில் வைத்திருந்த அவர்கள், கரோல் பாக் ஆர்ய சமாஜ் சாலையில் அந்த காரை நிறுத்திவிட்டு உணவகத்திற்குச் சென்றார். பின்னர், அவர்கள் இரவு 7.15 மணிக்குத் திரும்பி வந்து பார்த்த போது காரின் கண்ணாடிகள் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், காரில் இருந்த ரூ.2 மதிப்பிலான நகைகளும் திருடப்பட்டிருந்தன. இது குறித்து கண்ணையா லால் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. அதில், அங்கு இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள், அந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்ட நிலையில் அவரும், அவரது சகோதரர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவும் திருடப்பட்ட நகைகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த நகை வியாபாரி கண்ணையா லால், தனது மகன் துருவ் சோனி மற்றும் பணியாளருடன் தொழில்முறை விளம்பர பணிகளுக்காக கடந்த 18-ம் தேதி டெல்லி வந்தார். மறுநாள் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள வியாபாரிகளைச் சந்தித்த அவர், மாலை 5.30 மணியளவில் மூன்று பைகளில் தங்கத்தை வைத்திருந்தார்.
இதற்கிடையே, மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த அந்த மூன்று பைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த துணிகர சம்பவம் குறித்து தில்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.