அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் 3 சிலிண்டர்கள் தானா? - பிரேமலதா
சென்னை கோயம்பேட்டில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாட இருப்பதாக தெரிவித்த தே.மு.தி.க பொதுசெயலாளர் பிரேமலதா, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில், 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற முதல் அமைச்சரின் அறிவிப்பை ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார். 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியது என்று விசிகவை மறைமுகமாக விமர்சித்த பிரேமலதா, சோபாவுக்காக கூட்டணி நிலைபாடு மாறாது என்று தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் நடைபெற உள்ள விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்போவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் மூன்று சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாக விசிகவை அவர் மறைமுகமாக விமர்சித்தார். சோபா மற்றும் பதவிகளுக்காக தங்களது கூட்டணியின் நிலைப்பாடுகள் ஒருபோதும் மாறாது என்றும் பிரேமலதா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.