PulseNews
லைஃப் ஸ்டைல்

'சுதந்­திர தினத்தில் காற்­றில் பறந்­த விஜ­யின் மானம்; வெட்கமே இல்லையா?': முரசொலி கடும் தாக்கு

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார். இதை தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விமர்சித்து தலையங்கம் எழுதியிருக்கின்றனர். அந்தத் தலையங்கத்தில், "சுதந்­திர தினத்­தன்று கொடி ஏற்­றிய முத­ல­மைச்­சர் விஜய்­யின் மானம் காற்­றில் பறந்­தது. வெட்­கமோ, கூச்­சமோ இல்­லா­மல் ஒரு நடி­கையை முன்­வ­ரி­சை­யில் உட்­கார வைத்து, இரு­வ­ரும் மாறி மாறி சல்­யூட் வைத்­துள்ள காட்­சியை அவ­ருக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளா­லேயே சகிக்க முடி­ய­வில்லை. அசிங்­கத்­தை­யும் அரு­வ­ருப்­பை­யும் பட்­ட­வர்த்­த­ன­ மா­கச் செய்­வ­தன்­மூ­ல­மாக அதனை நியா­யப்­ப­டுத்த நினைக்­கி­ற­வர் ­தான் இன்று தமிழ்­நாட்­டுக்கு முத­ல­மைச்­ச­ராக வந்­துள்­ளார். மூன்றே மாதங்­க­ளில் அவ­ருக்கு தனது செல்­வாக்கு நிலைக்­குமா, பதவி நிலைக்­குமா என்ற பயம் வந்­து­விட்­டது. அதை­யும் அவர் உரையே காட்­டிக் கொடுத்­து­விட்­டது. கொடி ஏற்­றி­விட்டு முத­ல­மைச்­சர் விஜய் பேசு­கி­றார். “எல்­லோ­ரும் வாக்­க­ளித்­து­விட்­டோம், விஜய்யை ஜெயிக்க வைத்து முத­ல­மைச்­சர் ஆக்­கி­விட்­டோம், எனவே கட­மை­யெல்­லாம் முடிந்து விட்­டது என்று யாரும் ஒதுங்­கிப் போய்­வி­டா­தீர்­கள். இனி­மேல்­தான் நீங்­கள் நம்­மு­டனே, அர­சு­டனே இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் உங்­க­ளுக்­காக இருக்­கிற அனைத்து நல்ல திட்­டங்­க­ளை­யும் என்­னால் செயல்­ப­டுத்த முடி­யும்” என்று அழுது புலம்பி இருக்­கி­றார். இந்­தப் புலம்­ப­லுக்கு, இந்த அழு­கைக்கு என்ன கார­ணம்? அவரை நம்பி வாக்­க­ளித்­த­வர்­கள், ‘தவறு செய்­து­விட்­டோம்’ என்று வருந்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள். 10 வயது சிறுமி கோவை­யில் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்­டுச் சிதைக்­கப்­பட்­ட­போது அதை மறைக்க நினைத்­தது விஜய் அரசு. ‘நீங்க ஆ­க்ஷன் ஹீரோ... தப்பு நடந்தா நட­ வ­டிக்கை எடுப்­பீங்­கன்னு நினைச்சு தானே வாக்­க­ளித்­தோம்’ என்று ஒரு பெண் கத­றி­னாரே. இப்­படி பல பேரும் கத­றிக் கொண்டு இருக்­கி­றார்­கள். தனது படத்­தைத் தயா­ரித்த சினிமா தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மகு­டம் சூட்­டிக் கொண்டு இருக்­கி­றார் விஜய். ‘ஜன­நா­ய­கன்’ படத்­தைத் தயா­ரித்த வெங்­கட நாரா­யணா தமிழ் நாடு அர­சின் டெல்லி சிறப்­புப் பிர­தி­நி­தி­யாம். ‘பிகில்’, ‘கோட்’ படத்தை தயா­ரித்த அர்ச்­சனா கல்­பாத்தி கோவில்­க­ளுக்­கான அறங்­கா­வ­லர்­க­ளைத் தேர்வு செய்­யப் போகி­றா­ராம். ‘லியோ’ படத்­தைத் தயா­ரித்த ஜெக­தீஷ் பழ­னி­சா­மி­தான் முத­ல­மைச்­ச­ரின் தனிச் செய­லா­ளர். தனது ஜோசி­ய­ருக்கு மகு­டம். தேர்­த­லுக்கு முன்­ன­தாக தனக்கு செலவு செய்­த­வ­ருக்கு பதவி. இது­தான் நடக்­கி­றது. இதை எல்­லாம் தலை­யாட்டி ஏற்­றுக் கொள்­வார்­கள் மக்­கள் என்று நினைக்­கி­றாரா விஜய்? பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் நடக்­காத நாள் இல்லை. இதை விஜய் அரசு மறைக்­கும் என்­ப­தற்கு உதா­ர­ணம் தான் கோவைச் சம்­ப­வம். போதை ம­ருந்து நட­மாட்­டம் துளி­யும் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. போதைப் பொருள் நட­மாட்­டம் குறித்து தக­வல் கொடுத்த கார­ணத்­தால் கோவை மாண­வன் அமு­தன் அந்­தக் கும்­ப­லால் அடித்தே கொல்­லப்­பட்­டுள்­ளார். அதையே மறைக்­கும் வகை­யில், ‘இது கோஷ்டி தக­ரா­றால் ஏற்­பட்ட மரணம்’ என்று சட்­ட­மன்­றத்­தில் சொன்­னார் அமைச்­சர் ராஜ்­மோ­கன். காவல் துறை­யைக் கையில் வைத்­துள்ள முத­ல­மைச்­சர் விஜய், வாய் திறக்­க­வில்லை. அமைச்­சர்­கள் மீது, எம்.எல்.ஏ.க்கள் மீது வந்த புகார் மீதா­வது நட­ வ­டிக்கை எடுத்­துள்­ளாரா விஜய்? திரு­வை­குண்­டம் எம்.எல்.ஏ. சர­வ­ணன் ­மீது விஜய் ரசிகை ஒரு­வரே பாலி­யல் புகார் சொன்­னார். அந்த ரசி­கையை கட்­சி­யை­விட்டு நீக்­கி­விட்டு சர­வ­ண­னுக்கு போலீஸ் பாது­காப்பு கொடுத்­துள்­ளார் விஜய். ‘அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னத்­தில் லஞ்­சம்’ என குற்­றம் சாட்­டிய த.வெ.க. வழக்­க­றி­ஞர் கட்­சியை விட்டு நீக்­கப்­பட்­டுள்­ளார். பவு­டர் பயன்­ப­டுத்தி அதை வீடியோ எடுத்­துப் போட்ட அமைச்­சர் சரத்­கு­மார் இன்­ன­மும் அமைச்­ச­ர­வை­யில் இருக்­கி­றார். 100 கோடி ரூபாய் மதிப்­பி­லான கோவில் சொத்தை அப­க­ரித்த செய­லுக்­குப் பொறுப்­பேற்க வேண்­டிய அமைச்­சர் ரமேஷ் இன்­ன­மும் அமைச்­ச­ரா­கத் தான் நீடிக்கிறார். எவர்­மீ­தும் இது­வரை விஜய் நட­வ­டிக்கை எடுத்­தது இல்லை. அர­சைப் பற்றி விமர்­சித்து ‘ட்விட்­டர்’ போட்­டால் கைது. நீதி­மன்­றங்­கள் நித்­த­மும் த.வெ.க. ஆட்­சி­யா­ளர்­கள்­மீது தலை­யில் கொட்­டு­கின்­றன. சொர­ணையே இல்லை இவர்­க­ளுக்கு. இப்­ப­டித்­தான் போய்க் கொண்டு இருக்­கி­றது ஆட்சி. இதை எல்­லாம் மக்­கள் சகித்­துக் கொள்­வார்­கள் என்று நினைக்­கி­றார் விஜய். சுதந்­திர தின விழா­வுக்கு ஒரு நடி­கையை அழைத்­து­வந்து, அவ­ருக்கு ‘சல்­யூட்’ அடிப்­பதை விஜய் ரசி­கர்­க­ளா­லேயே ஏற்­றுக் கொள்ள முடி­ய­வில்­லையே. மக்­கள் எப்­படி ஏற்­றுக் கொள்­வார்­கள்? சுதந்­திர தினத்­தன்று விடு­த­லைப் போராட்ட வர­லா­று­களை ஊட­கங்­கள் வெளி­யி­டும். ஆனால் இம்­முறை நடிகை ஒரு­வ­ரு­டன் முத­ல­மைச்­சர் இது­வரை ஐந்து முறை ஒன்­றாக வெளி­யில் வந்­துள்­ளார் என்று வர­லாறு போடும் கேவ­லத்­தைப் பார்க்­கி­றோம். ‘விஜய் நன்­றாக டான்ஸ் ஆடு­வார்’ என்­ப­தற்­காக ஏறிய மின்­சா­ரக் கட்­ட­ணத்தை ஏற்­றுக் கொள்­வார்­களா மக்­கள்? ‘விஜய் அழ­கா­கச் சிரிக்­­ கிறார்’ என்­ப­தற்­காக ‘சொத்து வரியை எவ்­வ­ளவு வேண்­டு­மா­னால் போட்­டுக் கொள்­ளுங்­கள்’ என்று சொல்லி விடு­வார்­களா தமிழ்­நாட்டு மக்­கள் சமூக வலை­த­ளங்­க­ளில் கழு­விக் கழுவி ஊற்­று­கி­றார்­கள். ‘உங்­க­ளுக்­குத் தான் வாக்­க­ளித்­தோம்... வாக்­க­ளித்­த­தற்­காக வருத்­தப்­ப­டு­கி­றோம்’ என்று சொல்­லும் வீடி­யோக்­கள்­தான் அதி­க­மா­கப் பர­வு­கின்­றன. அத­னால்­தான், ‘என்­னோடு இருங்­கள், போய்­வி­டா­தீர்­கள்’ என்று கழி­வி­ரக்­கம் தேடப்­பார்க்­கி­றார் விஜய். மக்­கள் ஏமா­ளி­கள் அல்ல. அவர் இன்­ன­மும் தனி­மைப்படுத்­தப்­ப­டு­வார்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'சுதந்­திர தினத்தில் காற்­றில் பறந்­த விஜ­யின் மானம்; வெட்கமே இல்லையா?': முரசொலி கடும் தாக்கு
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 15-ம் தேதி ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வு குறித்து தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழாவில் ஒரு நடிகையை முன்வரிசையில் அமர வைத்து, அவரும் முதலமைச்சர் விஜய்யும் மாறி மாறி சல்யூட் செய்துகொண்டதை முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது. இந்தச் செயல் வெட்கக்கேடானது என்றும், முதலமைச்சரின் மானம் காற்றில் பறந்துவிட்டது என்றும் அந்த நாளேடு கடுமையாகச் சாடியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle