PulseNews
லைஃப் ஸ்டைல்

சர்வார்த்த சித்தி யோகம் தரும் அஷ்வினி, ரேவதி! -பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி கோ. விவேகானந்தன்

அ ஸ்வினி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் எனவும் ரேவதி நட்சத்திரம் கடைசி நட்சத்திரம் என்பதையும் நாம் அறிவோம் அஸ்வினி நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருப்பதால் என்னவோ அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் சகோதரர்களின் மூத்தவராக, சீமந்த புத்திரராக இருப்பர் என்ற கருத்து ஜோதிட நூல்களில் காணப் படுகின்றது. அதேவேளை ரேவதி நட்சத்திரத்திற்கு கடைசி நட்சத்திரமாக இருப்பதால் ரேவதி நட்சத்திரத்தில் பிறப்பவர் கடைக்குட்டி பிள்ளையாக இருப்பார் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படவில்லை. அஸ்வினி நட்சத்திரத்திற்கு ஐயம், வசிமா, புரவி, கற்கி, பரிதேசி, கோடகம், சென்னி, இவிளி, குதிரை, ஐப்பசி என பெயர்கள் கூறப்பட்டுள்ளது. ரேவதிக்கோ தாலம், தோணி, கடை மீன், மரக்கலம், நாவாய் என்னும் பெயர்களையும் டோடலோர்கள் கூறுகின்றன. அஸ்வினி நட்சத்திரம் வான்வெளியில் ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து குதிரை தலை போன்று தோற்றுப்படிப்பதால் இதற்கு அஸ்வினி என பெயர் உருவானது. அஸ்வம் என்றால் வடமொழியில் குதிரை என பொருள்படும்.ரேவதி நட்சத்திரம் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து தாமரைப் போன்று வான்வழியில் தோற்றம் அளிக்குமாம். இவை இரண்டும் கண்டார்ந்த நட்சத்திரங்கள் வகையைச் சார்ந்தது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் பொதுவாக திருமணம் முதலிய சுப காரியங்களுக்கு ரேவதி நட்சத்திரமும் அஸ்வினி நட்சத்திரமும் சிறப்பானவை என்றாலும் அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதம் மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் கடை பாதம் இவை கண்டாத நட்சத்திரமாக இருப்பதால் இந்த நட்சத்திரங்களில் அந்த வேளையில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நலம். அவ்வாறு ரேவதி நட்சத்திரத்தில் சுப காரியங்களைச் செய்யும் வேளை சனிக்கிழமை ரேவதி நட்சத்திரமும் இணைந்து வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காரணம் ரேவதி நட்சத்திரமும் சனிக்கிழமை இணைந்து வரும் நாளை நாச யோகம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவை சிவகாரியங்களுக்கு விலக்க வேண்டியதாகும். திருமணத்திற்காக பொருத்தம் பார்க்கின்ற வேளை அஸ்வினி நட்சத்திரமும், ரேவதி நட்சத்திரமும் பாதரட்ஜு நட்சத்திரங்களாக சொல்லப்பட்டுள்ளன. எனவே அஸ்வினி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களை தம்பதிகளாக இணைக்கும் வேலை பொருளாதார பின்னடைவு ஒரு இடத்தில் வாழ முடியாத சூழல் ஏற்படலாம் என்பதனை "பாதவேதோ தீப் பிரம்சம் தாரித்ரியஞ்ச பிரயச்சதி'' என்னும் பிரசன்னம் மார்க்க வாக்கியம் நமக்கு தெரிவிக்கின்றது. முகூர்த்த மாதவிதம் என்னும் நூல் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவிக்கின்றது. நீங்கள் பயணம் செய்கின்ற வேலை அன்றைய தினம் அஸ்வினி நட்சத்திரமாக இருந்தது என்றால் சணப்பயிரை உண்டு கொண்டோ அல்லது அதனை தொட்டுக்கொண்டு பயணம் செய்தால் வெற்றி கிடைக்கும் எனவும் அன்றைய தினம் ரேவதி நட்சத்திரமாக இருந்தது என்றால் நீங்கள் முள்ளங்கி சாதம் உண்டு கொண்டு பயணம் செய்தால் வெற்றி கிடைப்பதாகவும். அந்த நூல் கூறுகின்றது. அவ்வாறே அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் ரேவதியும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வருகின்ற நாள் அமிர்த சித்தியோகம் எனவும் இவை எல்லா சுப காரியங்களுக்கும் சிறப்பான நாளாகவும் இதனை சர்வார்த்த சித்தி யோகம் எனவும் சீக்கிரம் போதம் நூல் என் கூறுகின்றது. புத்தாடை அணியும்போது முதன்முதலாக அஸ்வினி நட்சத்திரத்தில் புத்தாடி அணிய அதிக ஆடைகள் பரிசாக கிடைக்கும் எனவும் ரேவதி நட்சத்திரத்தில் புத்தாடை அணிந்தால் ரத்தினங்களில் லாபம் ஏற்படுவதாகவும் பிரகத் சங்ஹிதை நூல் கூறுகின்றது. உலகியல் ஜோதிடத்தில் மன்னர்கள் மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் ஏற்படும் துயரங்கள் மரணங்களை முன்பாக கண்டறிவதற்கு நட்சத்திரங்கள் பயனாகின்றன. அவற்றில் அஸ்வினி நட்சத்திரத்தை தூமகேதுவானது பிடித்தால் மகாராஷ்டிராவை ஆள்பவருக்கு தீது எனவும் (அஸ்மக தேசம்) ரேவதி நட்சத்திரத்தை தூமகேது பிடித்தது என்றால் திராத தேசம் என்னும் இமாச்சல், உத்தரகாண்ட் ஆள்வோருக்கு தீது வர இருப்பதை உணர்ந்து கொள்ளலாம் எனவும் வராக மிஹிரர் கூறுகின்றார். அஸ்வினி நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பதுகூட ராஜயோகத்தை தருவதாக சாராவலி சொல்கின்றது. அஸ்வினி நட்சத்திரம் குதிரையை போன்று தோற்றமளிப்பதாலும் குதிரையின் முகம் பதித்த மோதிரத்தை கைகளில் அணிவதும் சுவர்களில் குதிரையின் படங்களை காலை எழுந்ததும் பார்க்கும்படியாக வைப்பதும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என உணரலாம். அவ்வாறே ரேவதி நட்சத்திரம் மிருதங்கம் போன்ற வடிவோடு வான்வெளியில் தோன்றுவதால் இந்த நட்சத்திரக்காரர்கள் மிருதங்கத்தின் வடிவத்தை மோதிரங்களில் பதித்து அணிந்துகொள்வதாலும் சுவர்களில் மிருதங்கத்தின் வடிவத்தை படமாக வைத்து அதிகாலையில் பார்ப்பதாலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் எனவும் நாம் உணர வேண்டும். செல்: 94438 08596

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சர்வார்த்த சித்தி யோகம் தரும் அஷ்வினி, ரேவதி! -பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி கோ. விவேகானந்தன்
PulseNews சுருக்கம்

ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் நட்சத்திரமாகவும், ரேவதி கடைசி நட்சத்திரமாகவும் விளங்குகின்றன. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகவோ அல்லது சகோதரர்களில் முதன்மையானவராகவோ இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதே சமயம், ரேவதி கடைசி நட்சத்திரமாக இருந்தாலும், இதில் பிறந்தவர்கள் குடும்பத்தின் கடைசிப் பிள்ளையாகத்தான் இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை என பிரசன்ன ஜோதிட நிபுணர் அம்சி கோ. விவேகானந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle