இந்த வார ராசி பலன் 30-8-2026 முதல் 6-9-2026 வரை
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, அலைபேசி: 0091 72001 63001, 93837 63001. கிரக பாத சாரம்: சூரியன்: மகம்- 4. சந்திரன்: உத்திரட்டாதி- 1. செவ்வாய்: திருவாதிரை- 4. புதன்: பூரம்- 1. குரு: ஆயில்யம்- 1. சுக்கிரன்: சித்திரை- 2. சனி: ரேவதி- 1 (வ). ராகு: அவிட்டம்- 4. கேது: மகம்- 2. கிரக மாற்றம்: 2-9-2026 துலா சுக்கிரன் பகல் 1.44 மணிக்கு. சந்திரன் மாறுதல் ஆரம்பம்: மீனம் 1-9-2026 அதிகாலை 3.24 மணிக்கு மேஷம் 3-9-2026 காலை 7.26 மணிக்கு ரிஷபம் 5-9-2026 காலை 10.18 மணிக்கு மிதுனம் மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்) ராசியாதிபதி செவ்வாய் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது விலகி ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பயணங்கள் மூலமாக ஒருசில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளித்து வளமான பலன்களை பெறுவீர்கள். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் சில இடர்பாடுகள் இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 5. ரிஷபம் (கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டு. நெருங்கியவர்களின் உதவியானது தக்க நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் ஒருசில வளமான பலன்களை பெறலாம். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, தேவையற்ற தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறருடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருந்தாலும் எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்துவது தற்போதைக்கு சிறப்பு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 3, 4. மிதுனம் (மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான லாபத்தை ஈட்ட முடியும். தொழில் வளர்ச்சிக்காக வெளியிடங்களில் இருந்து பொருளாதார உதவிகள் கிடைக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரம் ஆகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்ட கூடிய உன்னதமான நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 1, 2, 5. கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்) ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதாலும், 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஒருசிலருக்கு உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒருசில அனுகூலங்கள் தாமதப்படக் கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்வது நல்லது. முடிந்தவரை தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது உத்தமம். மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் ஆகும். வரும் நாட்களில் நல்ல பலன்களை நீங்கள் பெறுவதற்கு அம்மான் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4. சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்) ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருந்தால் ஏற்றமிகுந்த பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரிவர பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒரு பெரிய மனுஷனுடைய ஆதரவு தற்போது கிடைக்கும் என்பதால் ஒருசில வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய யோகமானது இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைகூட சுலபமாக புரிந்து கொண்டு கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5. கன்னி (உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பது மிகவும் சிறப் பான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்பானது உண்டு. இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். நீண்ட நாட்களாக தடைப்பட்டுவந்த ஒரு நல்ல காரியம் தற்போது கைக்கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பானது இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக விலகி அனுகூலங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பெற்றோர், ஆசிரியருடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 5. துலாம் (சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. நெருங்கியவர்களின் உதவியானது சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய நேரம் ஆகும். சில நேரங்களில் அனாவசிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்ககூடிய வாய்ப்பானது இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதையும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 1, 2. விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை) உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள் மூலமாக ஒருசில வளமான பலன்களை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு வெளியிடங்களில் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமில்லாமல் பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது சற்று குறைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு உங்களது பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைகூட எளிதில் புரிந்து கொண்டு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்) உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எவ்வித பிரச்சினையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். ராசி அதிபதி குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது தற்போதைக்கு நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் உங்களது தனி திறமையோடு செயல்பட்டு வளமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒருசில வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எடுத்தபணியை குறித்து நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்களுக்கு உடனிருப்பவர்களால் சின்னசின்ன இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறைய தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5. மகரம் (உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ல் செவ்வாய், 7-ல் குரு, 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிக மிகச் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழி-ல் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் வரும் நாட்களில் படிப்படியாக விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கௌரவமான நிலையினை அடைய முடியும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியருடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரம் ஆகும். ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. உங்களுக்கு இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் விலக சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 5. கும்பம் (அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்) ஜென்ம ராசியில் ராகு, 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். பேச்சில் பொறுமையோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும். சில விஷயங்களில் வேலை ஆட்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் நிதானமாக செயல்பட்டாலும் சக மாணவ- மாணவியர்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் நல்ல பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 1, 2. மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) ராசி அதிபதி குரு பகவான் 5-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் சாதகமாக இருக்கும். உற்றார்- உறவினர் கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியரீதியாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் வரும் நாட்களில் குறையும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய நேரம் ஆகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கௌரவமான நிலை உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் திறமையோடு செயல்பட்டு கடினமான விஷயத்தைகூட எளிதில் புரிந்துகொள்வார்கள். வரும் நாட்களில் நற்பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 3, 4.

ஆகஸ்ட் 30, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரையிலான இந்த வார ராசி பலன்களை முனைவர் முருகுபாலமுருகன் வழங்கியுள்ளார். சென்னை வடபழனியைச் சேர்ந்த இவரை 044 24881038 அல்லது 72001 63001, 93837 63001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வார காலத்தின் கிரக நிலைகளின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் சஞ்சார விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 1.44 மணிக்கு சுக்கிரன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேலும், செப்டம்பர் 1-ம் தேதி அதிகாலை 3.24 மணிக்கு சந்திரன் மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு இடம்பெயரத் தொடங்குகிறார்.