CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் விவசாய வாழ்வாதாரமான டெல்டா பாசனம் இந்த மேட்டூர் அணையை நம்பியே உள்ளது.

சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய்:

இன்று மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று திறந்து வைத்தார். மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் மேட்டூர் அருகில் உள்ள சின்னக்காவூர் என்ற கிராமத்திற்குச் சென்றார். அப்போது, அங்கே இருந்த விவசாயி ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்றார்.

முதலமைச்சர் விஜய் திடீரென தங்களது வீட்டிற்கு வந்ததால் அந்த வீட்டில் இருந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, அந்த வீட்டில் இருந்த மூதாட்டி விஜய்யை கண்ட மகிழ்ச்சியில் உற்சாகத்தின் உச்சிக்கேச் சென்றார். அவர் விஜய்யின் கையைப் பிடித்துக் கொண்டு இறுதிவரை அவருடன் உடன் சென்று அவரது வாகனத்தில் ஏற்றிவிடும் வரை அந்த மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

கண்ணாடியின் விலை என்ன?

Christian Dior kannadi potu kali kindinu iruku paati 😹😹😹😹
Iniku thedhiku Patti is the sensation... pic.twitter.com/FBDfrf1lzv
— KN (@RR013C) September 1, 2026

தன் கையைப் பிடித்துக் கொண்டே வந்த மூதாட்டிக்கு விஜய் தான் அணிந்து வந்த கண்ணாடியை அன்பளிப்பாக வழங்கினார். அந்த கண்ணாடியை விஜய்யே அந்த மூதாட்டிக்கு அணிவித்தார். விஜய் அந்த மூதாட்டிக்கு அணிவித்த கண்ணாடி மிகவும் விலையுயர்ந்த கண்ணாடி ஆகும்.

அந்த கண்ணாடி கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தின் கண்ணாடி ஆகும். அந்த கண்ணாடியின் விலை ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 40 ஆயிரம் வரை இருக்கும். சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள கண்ணாடியை முதலமைச்சர் விஜய் மூதாட்டிக்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அந்த கண்ணாடியை அணிவித்த பிறகு அந்த மூதாட்டி அதே கண்ணாடியுடன் உலா வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், முதலமைச்சர் விஜய் தான் செல்லும் வழியில் விவசாய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூதாட்டிகளையும் நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுமட்டுமின்றி மேட்டூரில் அணையைத் திறந்து வைக்கும்போது முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பலரையும் தன்னுடன் அழைத்து உடன் வைத்துக்கொண்டு அணையைத் திறந்து வைத்தார். பின்னர், அவர்களிடம் இந்த அணை திறப்பால் தங்களுக்கு என்ன பயன்? என்றும் கேட்டறிந்தார். அவர்கள் இந்த அணை திறப்பால் தங்களுக்கு குடிநீருக்கு மட்டுமே பயன்படும் என்று அவர்கள் கூறியதும், பாசனத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர்களிடம் விஜய் ஆலோசித்துள்ளார். பின்னர், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

Source: Read Full Article

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
அதன்பின்னர் மேட்டூர் அருகிலுள்ள சின்னக்காவூர் கிராமத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த விவசாயி ஒருவரின் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டார். அப்போது, அந்த வீட்டில் இருந்த பாட்டி ஒருவருக்கு முதலமைச்சர் விஜய் விலையுயர்ந்த கண்ணாடி ஒன்றைப் பரிசாக வழங்கினார்.