PulseNews
லைஃப் ஸ்டைல்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்..!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். மக்களவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையான 543 தொடர வேண்டும் என்றும், அதே எண்ணிக்கையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையால் அவற்றுக்கு அநீதி இழைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் 3-ல் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மகளிர் இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். “மகளிர் அதிகாரம் பெறும்போதுதான் நாடு முன்னேறும்” எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “இது ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் மட்டும் அல்ல” என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக, பாமக, பாஜக, தேமுதிகவின் எதிர்ப்புக்கு மத்தியில் தீர்மானம் நிறைவேற்றம். திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மா.கம்யூ., விசிக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றம்.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்..!
PulseNews சுருக்கம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார். மக்களவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையான 543 அப்படியே நீடிக்க வேண்டும் என்றும், அதே எண்ணிக்கையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு, தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் அநீதி இழைக்கப்படுவதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle