ஒரு பாக்கெட் காஃபி தூள் இருந்தா போதும்; உங்க வீட்டு பூச்செடிய கொத்து கொத்தா பூக்க வைக்கலாம்
பொதுவாக நம் வீட்டில் வைத்திருக்கும் செடி மண் வளத்தை பொறுத்து வளரும். சில செடிகள் நட்டு வைத்த சில நாட்களிலே நன்கு வளர்ந்து பூக்களை தரும். சில செடிகள் மரம் போன்று வளர்ந்த பின் தான் பூக்கும். இப்படி செடிகளிலேயே பல வகைகள் உள்ளன. ஆனால், ஒரு சில செடிகள் என்ன தான் மண் வளம் இருந்தாலும், நாம் என்ன தான் உரங்களை போட்டாலும் வளரவே வளராது. 10 கோடி பேர அசால்டா டீல் பண்ண ஏர்போர்ட்... உலகிலேயே டாப் இதுதான்; இந்தியாவுக்கு இப்படி ஒரு வளர்ச்சியா? இப்படி மந்தமான வளர்ச்சி நிலையில் இருக்கும் உங்கள் வீட்டு செடிகளை ஒரே ஒரு கரைசல் மூலம் சூப்பராக வளர வைக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் காஃபி தூள் ஒரு டம்ளர் சிம்பிள் டிப்ஸ் ஒரு டம்ளரில் இரண்டு டீஸ்பூன் காஃபி தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரைசலுக்கு அதிகமாக 2 மடங்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இந்த கரைசலை காலை மற்றும் மாலை வேளையில் உங்கள் செடியின் மீது தெளித்து விடுங்கள். குறிப்பாக செடியின் இலை மீது தெளியுங்கள். ஏனென்றால் இலையில் தான் ஒளிச்சேர்க்கை நடக்கும். அதனால் இலையில் தெளித்தால் செடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும், மண்ணிலும் கரைசலை தெளியுங்கள். View this post on Instagram A post shared by Priyanka❣️ (@priyanka_vazhkai) இப்படி தினமும் செய்து வந்தால் பூக்காமல் இருக்கும் உங்கள் வீட்டு செடி பூத்து குலுங்குவதை நீங்கள் பார்க்கலாம். இந்த கரைசலை எந்த வகையான செடிகளுக்கும் பயன்படுத்தலாம். இனிமேல் உங்கள் வீட்டு பூச்செடி பூக்கவே இல்லை என்று கவலைப்படாமல் இந்த கரைசலை பயன்படுத்தி செடியை வளமாக்குங்கள்

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகள் மண்ணின் தன்மையைப் பொறுத்தே வளர்கின்றன. சில செடிகள் விரைவாகப் பூக்கும் நிலையில், இன்னும் சில செடிகள் மரம் போல வளர்ந்த பின்னரே பூக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.
முறையான உரமிட்டாலும் சில செடிகள் மந்தமான வளர்ச்சியுடனேயே காணப்படும். அத்தகைய செடிகளை நன்கு பூக்க வைக்க, ஒரு பாக்கெட் காஃபி தூள் போதுமானது என்று கூறப்படுகிறது.