PulseNews
லைஃப் ஸ்டைல்

இனி கை வலிக்க ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டாம்... ஒரு அலுமினிய ஃபாயில் போதும்; வேலை ஈஸி

உண்மையைச் சொல்லப்போனால், ஃபிரிட்ஜை சுத்தம் செய்வதை யாருமே விரும்புவதில்லை. பழைய உணவுகள், பிசுபிசுப்பான சாஸ் சிதறல் மற்றும் கண்ணாடி தட்டுகளில் வழிந்த கரைகள் என ஃபிரிட்ஜ் நிறைந்து வழியும் போது அதைச் சுத்தம் செய்வது எரிச்சலாக இருக்கும். பின்னர் சில வாரங்களிலேயே மீண்டும் பழையபடி ஃபிரிட்ஜ் அழுக்காகிவிடும். மர தரையில் கறையா? ஒரு சின்ன கீறல் கூட விழாம க்ளீன் பண்ணலாம்; இந்த ஒரு ட்ரிக் தெரிஞ்சா போதும் உணவுக் கழிவுகளும் ஈரப்பதமும் சும்மா இருப்பதில்லை, அவை தட்டுகளின் இடுக்குகளில் புகுந்து, பிடிவாதமான கரைகளாக மாறி, ஃபிரிட்ஜைத் திறக்கவே யோசிக்க வைக்கும் அளவுக்கு துர்நாற்றத்தையும் ஏற்படுத்திவிடும். ஆனால், இந்த அத்தனை சிரமங்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற ஒரு எளிய வழி உள்ளது. அது குறித்து பார்க்கலாம். அழுக்கும் துர்நாற்றமும் உருவாவது எப்படி? ஒவ்வொரு முறை சாஸ் சிந்தும்போதும், கண்டெய்னர்களில் கசியும்போதும், அல்லது பாக்கெட்டுகளில் இருந்து சொட்டும்போதும் தட்டுகளில் கழிவுகள் தங்குகின்றன. இவற்றை உடனே சுத்தம் செய்யாவிட்டால், அது காய்ந்து பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியின் நிறத்தைக் கெடுப்பதுடன், எட்ட முடியாத இடுக்குகளில் போய்ச் சேர்ந்துவிடும். காலப்போக்கில், இந்த அழுக்குச் சேர்க்கை ஃபிரிட்ஜ் சுத்தப்படுத்துவதை ஒரு முடிவில்லாத வேலையாக மாற்றுகிறது. மேலும், இந்த இடுக்குகளில் தங்கும் உணவுக் கழிவுகள் அழுகிப்போவதே ஃபிரிட்ஜில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு முதன்மையான காரணியாகும். அலுமினிய ஃபாயில் ஃபிரிட்ஜை எப்படிப் பாதுகாக்கிறது? உணவோ அல்லது திரவமோ நேரடியாக ஃபிரிட்ஜ் தட்டின் மீது விழுவதற்குப் பதிலாக, மேலே விரித்து வைக்கப்பட்டுள்ள அலுமினிய ஃபாயில் தாளில் விழுகிறது. தட்டுகளின் அளவுக்கு ஏற்ப ஃபாயில் தாளை வெட்டி விரிக்கும் போது, சுத்தம் செய்வது மிகவும் எளிதாகிறது. கரை படிந்த தாளை எடுத்துவிட்டுப் புதிய தாளை மாற்றிவிட்டால் போதும். ஒவ்வொரு முறையும் பிரஷ் மற்றும் கிளீனர் கொண்டு காய்ந்துபோன கரைகளைத் தேய்த்து எடுப்பதை விட இது செலவு குறைவானது மற்றும் சிரமமில்லாதது. துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த இது எப்படி உதவுகிறது? பொதுவாக, மூலைகளிலும் பெட்டிகளுக்கு அடியிலும் நம்மால் கவனிக்கப்படாத கழிவுகளிலிருந்தே துர்நாற்றம் தொடங்குகிறது. தட்டின் மேற்பரப்பை அடையும் முன்பே சிந்திய உணவுகளை ஃபாயில் மூலம் தடுத்துவிடுவதால், மறைமுகமான இடங்களில் அழுக்கு சேர்வது குறைகிறது. இது தவிர, சீஸ் அல்லது மீன் போன்ற கடுமையான வாசனை வீசும் உணவுகளை ஃபாயில் தாளில் சுற்றி வைப்பது, அவற்றின் வாசனை அருகில் இருக்கும் பிற உணவுகளுக்குப் பரவாமல் தடுக்க உதவும் கூடுதல் நன்மையையும் தருகிறது. ஃபாயில் தாளை எப்படி சரியாக பயன்படுத்துவது? முதலில் ஃபிரிட்ஜை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே இருக்கும் அழுக்கின் மீது ஃபாயில் பேப்பரை விரிக்கக் கூடாது. தட்டுகள் நன்றாகக் காய்ந்ததும், ஃபாயில் தாள்களைத் தேவைப்படும் அளவிற்கு வெட்டி, காற்றுப் குமிழ்கள் இல்லாமல் சமமாக விரிக்கவும். ஃபிரிட்ஜின் காற்று சுழற்சி துளைகளை (Air vents) ஃபாயில் கொண்டு மூடக்கூடாது; அது குளிர்ச்சியைப் பாதிக்கலாம். ஃபாயில் தாளில் கரை படிந்தாலோ அல்லது வாசனை வரத் தொடங்கினாலோ, அதை அப்படியே தூக்கி எறிந்துவிட்டுப் புதிய தாளை விரித்துவிடலாம். தேய்த்துச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

The Indian Express1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle