கிச்சனில் அதிகம் கலப்படம் செய்யப்படும் 10 உணவு பொருட்கள்: போலியை கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய சோதனைகள்
பால் முதல் மிளகாய்த்தூள் வரை நாம் தினமும் பயன்படுத்தும் பல உணவுப் பொருட்களில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது. அதனால், வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்யக்கூடிய FSSAI பரிந்துரைக்கும் எளிய சோதனைகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
தினசரி நாம் பயன்படுத்தும் பால் மற்றும் மிளகாய்த்தூள் உள்ளிட்ட பத்து வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்தகைய கலப்படங்களைக் கண்டறிய, பொதுமக்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய சில சோதனைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது.
குறைந்த நேரத்தில் வீட்டிலிருந்தே கலப்படத்தை உறுதி செய்ய உதவும் இந்த எளிய வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரத்தை எளிதில் சோதித்துக் கொள்ள முடியும்.